ஆண்கள் பெண்களை போல அலங்கரித்துக்கொண்டு, கடவுளை வழிபடும் விநோத வழக்கம் ஒன்று கேரளாவில் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்தியா பல விதமான கலாச்சாரங்களை உள்ளடக்கியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும், ஏன் அம்மாநிலத்திலுள்ள ஒரு ஒரு ஊருக்குள்ளும் மக்கள் பல விதமான பாரம்பரிய முறைகளை கடைப்பிடித்து வருகின்றனர்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாவரா என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது கொட்டங்குளங்கரா தேவி கோவில். இங்கு பகவதி அம்மன் முக்கியக் கடவுளாக வழிபடப்பட்டு வருகிறது. இது சுயம்புவாக தோன்றிய கடவுளாகும்.
இங்கு சமயவிளக்கு என்ற சடங்கு ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சடங்கில், ஆண் பக்தர்கள் பெண்களை போல வேடமிட்டு கடவுளை வழிபடுகின்றனர். ஆண்கள் பெண்களை போல மாறி நேர்த்திக்கடன் செலுத்தும் ஒரே திருவிழாவாக இருக்கிறது இந்த சமயவிளக்கு திருவிழா.
சமயம் என்றால் அலங்கரித்துக்கொள்ளுதல். பக்தர்கள் தங்களை அலங்கரித்துகொண்டு கைகளில் விளக்கை ஏந்தி வழிபாடு செய்வதனை சமய விளக்கு என்கின்றனர்.
ஒரு முறை காட்டில் விளையாடிக்கொண்டிருந்த மாடு மேய்க்கும் சிறுவர்கள் சிலர் விளையாட்டாக தங்களை பெண்கள் போல அலங்கரித்துக்கொண்டு, ஒரு கல்லிற்கு பூ, பழங்களை காணிக்கையாக வழங்கி பூஜை செய்துள்ளனர். ஒரு தேங்காயை பிரசாதமாக படைத்தனர்.
அந்த கல்லிலிருந்து தெய்வீக சக்தி வெளியாவது போல அவர்கள் உணர்ந்ததாகவும், அதனால் அந்த கல்லையே தெய்வமாக வழிபட தொடங்கி இந்த சடங்கு தொடங்கியதாகவும் கூறப்ப்படுகிறது.
பின்னர் கோவிலும் கட்டப்பட்டது. எனினும், பெண்கள் மட்டுமே தேவியை வழிபடவேண்டும் என்ற கட்டுப்பாடும் இருந்துள்ளது. இதனால், ஆரம்பக் காலங்களில் சிறுவர்கள், ஆண்கள் தங்களின் வேட்டி, அல்லது லுங்கிகளை புடவையை போல அணிந்துகொண்டு வழிபட தொடங்கினர்.
ஆண்கள் அவர்கள் ஏதேனும் ’பாவம் செய்திருந்தால்’ அதற்கு பரிகாரம் தேடவே இந்த வழக்கத்தை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.
அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை வழிபாடு நடக்கும். பெண்கள் (பெண் வேடமிட்ட ஆண்கள்) கைகளில் விளக்குகளை ஏந்தி வரிசையாக நின்றுகொண்டு ஊர்வலமாக செல்கின்றனர்.
பகவதி அம்மனுக்கு தேர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலத்திற்கு தயார் செய்யப்படுகிறது. ஆண்களும் புடவை, தாவணி, அல்லது சுடிதார் அணிந்துகொண்டும், நகைகள், பூக்களால் தங்களை அலங்கரித்து கொண்டும் சடங்கிற்கு தயாராகின்றனர்.
நல்ல வேலை, மனதுக்கு பிடித்த வாழ்க்கை துணை, உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தினர், உற்றார் உறவினரின் நலனுக்காக வேண்டிக்கொள்கின்றனர்.
19 நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில், கடைசி இரண்டு நாட்கள் சமயவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் ஆண்களுக்கு ஒப்பனை அலங்காரங்கள் செய்ய தனியாக ஒரு குழு இருக்கிறது. ஒருவர் முக அலங்காரத்தை பார்த்துக்கொண்டால், மற்றொருவர் சிகை அலங்காரம் செய்கின்றனர், மற்றவர், ஆடை அலங்காரத்தை பார்த்துக் கொள்கின்றனர்.
ரூ.500 முதல் ரூ.2000 ஆயிரம் வரை ஒப்பனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது
யாரும் பெண் வேடம் தரிக்கும் ஆண்களை கேலி செய்வதில்லை. இது கேரளாவின் மிக முக்கிய பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது
முதலில் உள்ளூர் மக்கள் மட்டுமே இந்த திருவிழாவில் பங்கேற்று வந்த நிலையில், தற்போது உலகளவிலும் பக்தர்கள் குவியத்தொடங்கியுள்ளனர். நியுசிலாந்து, லண்டன் போன்ற இடங்களிலிருந்தும் இந்த திருவிழாவுக்கு மக்கள் வருகை தருகின்றனர்.
இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்றால் நடைபெறாமல் இருந்த திருவிழா மீண்டும் கடந்த ஆண்டு தொடங்கியுள்ளது.
இந்த விழாவில் கலந்துகொண்ட பக்தர்களில் ஒருவரின் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பார்ப்பதற்கு அச்சு அசலாக பெண்ணைப்போலவே இருக்கிறார் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust