தமிழ்நாடு : வட இந்திய தொழிலாளர்கள் மீது வன்முறை நடைபெற்றது உண்மையா? | Fact Check

வடஇந்திய பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தவறான தகவல்கள் புகைப்படங்களுடன் 12 தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.
தமிழ்நாடு : வட இந்திய தொழிலாளர்கள் மீது வன்முறை நடைபெற்றது உண்மையா? | Fact Check
தமிழ்நாடு : வட இந்திய தொழிலாளர்கள் மீது வன்முறை நடைபெற்றது உண்மையா? | Fact CheckTwitter
Published on

சமீபத்தில் ரயிலில் தமிழ் பேசும் நபர் ஒருவர் இரண்டு வடமாநில தொழிலாளர்களை கன்னத்தில் அரையும் வீடியோ வைரலானது. தொழிலாளர்களை துன்புறுத்தியவர் வட மாநில தொழிலாளர்கள் வருகையால் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலை உருவாகியிருப்பதாக பேசுகிறார்.

இந்த வீடியோவில் தென்பட்ட மகிமைதாஸ் என்ற நபரை அடையாளம் கண்டு ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

இங்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தி பேசும் மக்களை தமிழ் மக்கள் துன்புறுத்துவதாக இணையத்தில் பல செய்திகள், காணொளிகள் பரவின.

முகமது தன்விர் என்ற ட்விட்டர் பயனர், "வட இந்திய மக்களை, இந்தி பேசும் மக்களை தமிழகத்தில் தாக்குகின்றனர். பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேச அரசுகள் மௌனம் காக்கின்றன. இதற்கு முன்னர் இந்தியாவில் இந்தி பேசும் மக்கள் துன்புறுத்தப்பட்டது இல்லை. கத்தி மற்றும் ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்துகின்றனர்" என ட்வீட் செய்திருந்தார்.

மேலும் பலர் தமிழகத்தில் இந்தி பேசும் மக்கள் மீது வன்முறை நடைபெறுவதாக ட்வீட் செய்து வருகின்றனர். பல வீடியோக்கள் பரவிவருகின்றன.

ஆனால் இந்த வீடியோக்கள் பல சூழ்நிலைகளில் பல மாநிலங்களில் எடுக்கப்பட்டவை இதற்கும் தமிழகத்தில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மேலே உள்ள ட்வீட்டில் 12 பீகாரி தொழிலாளர்கள் தமிழகத்தில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த வீடியோ, " ராஜஸ்தானின் ஜோத்பூரில் இருந்து ஒரு வழக்கறிஞர் குண்டர்களால் குத்திக் கொல்லப்பட்ட வீடியோ "

இதனை தமிழகத்தில் தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக கூறி தவறாக சித்தரித்து வருகின்றனர்.

மேலும் கோவையில் இரண்டு கும்பல்களுக்கு இடையில் நடைபெற்ற தகராறை வடமாநிலத்தவர்களுக்கு எதிரான வன்முறையாக மாற்றி பரப்பி வருகின்றனர்.

DainikBhaskar, abplive, Live_Hindustan மற்றும் Punjab Kesari போன்ற இந்தி செய்தி சேனல்கள் இந்த வீடியோக்களை ஆய்வு செய்யாமல் வெளியிட்டுள்ளதாக Fact Check இணையத்தளமான Alt News இணை நிறுவனர் முகமது ஷபிர் தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

வடஇந்திய பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் தவறான தகவல்கள் புகைப்படங்களுடன் 12 தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் கொல்லப்பட்டதாக வதந்தியைப் பரப்பி வருகின்றனர்.

இந்த பொய் செய்தி சம்பவங்கள் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு மார்ச் 2ம் தேதி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

தற்போது இந்த விவகாரத்தில் பொய் செய்தி பரப்பிய தெய்னிக் பாஸ்கர் பத்திரிகையின் உரிமையாளர், தன்வீர் போஸ்ட் என்ற ட்விட்டர் கணக்கின் உரிமையாளர் முகமது தன்விர் மற்றும் பிரசாத் உமாராவ் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது தமிழக காவல்துறை.

தமிழ்நாடு : வட இந்திய தொழிலாளர்கள் மீது வன்முறை நடைபெற்றது உண்மையா? | Fact Check
வடிவேலு, தேவாவுக்கு வழங்கிய கௌரவ டாக்டர் பட்டம் போலியானதா? உண்மை என்ன? | Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com