பொதுவாக கோடை விடுமுறைக்கு குளர்ச்சியான இடத்தை தேடி செல்வது வழக்கம். தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மலை பிரதேசங்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
அதே சமயம் இந்த கோடைக்காலத்தில் இந்தியாவில் நீங்கள் போக கூடாத இடங்களை தற்போது பார்க்கலாம்
மற்ற சீசன்களை விட கோடைக்காலத்தில் கோவாவில் இரு மடங்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும். ஆகவே மற்ற நாட்களை விட கோடைக்காலத்தில் கடற்கரையின் அழகினை ரசிக்க முடியாது. அதனால் கோடையில் கோவாவுக்கு செல்வதை தவிர்க்கவும்.
50kg தாஜ் மஹால் எனக்கே எனக்கு இந்த பாடல் வேண்டுமானால் எல்லா சீசன்களிலும் கேட்க இதமாக இருக்கும். ஆனால் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் நீங்கள் சென்றால் இந்த காலநிலையில் வீசும் வெப்பக்காற்று உங்களுக்கு சவலானதாக இருக்கும்.
நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல உண்மைதான் வேலை தேடி சென்னைக்கு வரும் ஒவ்வொரு குடிமகனையும் சென்னை கைவிடுவதில்லை.
அதே சமயம் இந்த நகரின் அழகை காண கோடைக்காலம் ஏற்றது அல்ல சுட்டெரிக்கும் வெயில் உங்களுக்கு பெரும் சோர்வை கொடுக்கும்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தங்க கோவில் அனைத்து மதத்தினரும் செல்லும் கோயிலாகும். ஆனால் இங்கு மே, ஜூன்,ஜூலை மாதங்களில் உச்சகட்ட வெப்ப நிலை இருக்கும். ஆகவே உங்களின் கோடைக்கால சுற்றுலாவுக்கு இது ஏற்றதல்ல
இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம் மாநிலத்தில் அமைந்துள்ளது டார்ஜீலிங். கோடைக்காலத்தில் அதிக சுற்றுலா பயணிகள் கூடும் இடமாகும். இதனால் நீங்கள் தங்க போகும் ஹோட்டல்களில் தண்ணீர் இல்லாமல் போவதும் போக்குவரத்து நெரிசலும் உங்களுக்கு கடும் சோதனையினை கொடுக்கலாம். எனவே கொடைக்காலத்திற்கு இந்த இடம் உகந்தது அல்ல
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust