கோடை விடுமுறை : இயற்கையில் லயிக்க நீங்கள் செல்ல வேண்டிய 5 இடங்கள்
தினம் தினம் ஓட சொல்லும் வாழ்க்கை. நிற்கிற இடத்தில் நிற்பதற்றே வேகமாக ஓட வேண்டிய உலகச் சூழலில். இப்படியான நிலையில் அனைத்தையும் உதறி தள்ளி இயற்கையில் கலக்க விரும்புகிறீர்களா..? கையில் எமர்சனை ஏந்தி, கையில் ஒரு கோப்பை தேநீருடன், மழை தூரலில் ஊர்ந்து செல்லும் மேகங்களைக் கவனித்துக் கொண்டே அமைதியாக லயித்திருக்க விருப்பமா? அப்படியானால் உங்கள் தேர்வு இந்த 5 இடங்களாக இருக்கட்டும்.
குறிப்பாக யோகா மீது உங்களுக்கு அளப்பெரிய காதல் இருந்தால், உங்களது இந்த கோடையை இங்கு செலவிடுங்கள்.
த வனா – டேஹ்ராடூன்
டேராடூனில் உள்ள “த வனா” என்கிற இடம், உண்மையான யோகப் பயிற்சிகளில் ஈடுபட சிறந்த இடமாக விளங்குகிறது. அழகான டூன் பள்ளத்தாக்கினால் சூழப்பட்ட இந்த இடம் இளைப்பாறுவதற்கான சிறந்த இடமாகவும் இருக்கிறது.
வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி, பிரார்த்தனை செய்து, ஓய்வெடுக்கும் அந்த சுற்றுச்சூழலே புத்துணர்வூட்டுகிறது.
திருவனந்தபுரம் – கேரளா
நீங்கள் இயற்கையின் அனைத்து அம்சங்களையும் நம்புபவர் எனில், உங்களுக்கு கண்டிப்பாக கேரளா ஒரு சிறந்த இடமாக இருக்கும். கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் யோகப் பயிற்சிகளுக்கான தேர்ந்த இடமாகும்.
இந்த இடத்தில் இருக்கும் சூழல், அமைதி ஆகியவை வியக்க வைக்கும் அளவிற்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியதாக இருக்கும். மேலும் உங்களுக்கு தேவையான பகுதியை நீங்கள் மட்டும் தனியாகப் பயன்படுத்திக் கொள்கிற வசதியும் இங்கு உண்டு.
அசகோவா – கோவா
கோவாவில் உள்ள அசகாவோ பகுதியின் ஊதா பள்ளத்தாக்கு பழங்கால யோகா நடைமுறைகளைப் பின்பற்றக் கூடிய புத்துணர்வு மையம் ஆகும்.
இங்கு யோகா பயிற்சிகள் கடற்கரை மணலின் மேல் செய்யப்படுகின்றன, அலைகள் மற்றும் பறவைகளின் ஒலியை பின்னணி இசையாக கொண்ட ரம்மியமான பகுதியாக இது இருக்கிறது.
பீஹார் ஸ்கூல் ஆஃப் யோகா - பீகார்
பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா உலகின் மிகவும் பிரபலமான யோகா புத்துணர்வு மையங்களில் ஒன்றாகும். ஆழ்ந்த உடற்பயிற்சி முறைகளுடன் யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற இந்த ஆசிரமம் மக்களுக்கு உதவுகிறது.
இந்த இடம் பண்டைய இந்திய யோகாவின் சாரம் கொண்டது. முங்கேரில் அமைந்துள்ள இந்த இடம் சுவாமி சத்யானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது.
கைவல்யதாமா ஆசிரமம் - புனே
மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆசிரமம், நாட்டின் சிறந்த யோகா மற்றும் ஆரோக்கியத் தங்குமிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
புனே மற்றும் மும்பைக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஆசிரமம் மனம், உடல் மற்றும் ஆன்மா இடையே சமநிலையை அடைய உதவும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை வழங்குகிறது. இங்குள்ள நிகழ்ச்சிகள் உடல் நலனை மட்டுமல்ல, உளவியல் நலனையும் நோக்கமாகக் கொண்டது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust