Bank locker rules : வங்கி லாக்கரில் எதையெல்லாம் வைக்கலாம்? புதிய விதிகள் என்னென்ன?

வங்கிகள் தங்கள் அலட்சியம், ஊழியர்களின் மோசடி அல்லது புறக்கணிப்பு போன்றவற்றின் போது பொறுப்பேற்கின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நாம் செலுத்தும் வாடகையை விட நூறு மடங்கு வரை வங்கிகள் இழப்பீடு வழங்கும்.
Bank locker rules : வங்கி லாக்கரில் எதையெல்லாம் வைக்கலாம்? புதிய விதிகள் என்னென்ன?
Bank locker rules : வங்கி லாக்கரில் எதையெல்லாம் வைக்கலாம்? புதிய விதிகள் என்னென்ன?Twitter
Published on

தனிநபர்கள், நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், சங்கங்கள் என வங்கி லாக்கர் வசதிகளைப் பயன்படுத்துகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதல்களுக்கு இணங்க, தற்போதுள்ள அனைத்து வங்கி லாக்கர் விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

இந்த திருத்தப்பட்ட விதிகளை நிறைவேற்ற 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி காலக்கெடு விதித்துள்ளது.

ET அறிக்கைப்படி வங்கி லாக்கர்கள், நகைகள் மற்றும் ஆவணங்கள் போன்ற பொருட்களை பாதுகாப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட லாக்கர் ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ளபடி, லாக்கர்களில் பணம் அல்லது கரன்சியை சேமிப்பது அனுமதிக்கப்படாது.

பஞ்சாப் நேஷனல் வங்கியின் திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தம், ஆயுதங்கள், வெடிமருந்துகள், போதைப்பொருள்கள், தடைசெய்யப்பட்ட பொருட்கள், அழிந்துபோகக்கூடிய பொருட்கள், சட்டவிரோதமான பொருட்கள் அல்லது வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து தரக்கூடிய பொருட்களை சேமிப்பதை வெளிப்படையாக தடை செய்கிறது.

உங்கள் வங்கி லாக்கரில் என்ன சேமிக்கலாம்?

சொத்து ஆவணங்கள், நகைகள், கடன் ஆவணங்கள், பிறப்பு/திருமணச் சான்றிதழ்கள், சேமிப்புப் பத்திரங்கள், காப்பீட்டு பாலிசி மற்றும் பிற ரகசிய மற்றும் தனிப்பட்ட பொருட்களைப் பாதுகாக்க வங்கி லாக்கர்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Bank locker rules : வங்கி லாக்கரில் எதையெல்லாம் வைக்கலாம்? புதிய விதிகள் என்னென்ன?
நம் வீட்டில் எவ்வளவு தங்கம், பணம் வைத்திருக்கலாம்? தங்கத்துக்கு வரி கட்டவேண்டுமா?

வங்கி லாக்கரில் பொருட்களை சேமிப்பது எப்படி?

பேப்பர் போன்ற பொருட்களை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க, காற்றுப்புகாத (ஜிப்-சீல் செய்யப்பட்ட) பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துமாறு கோட்டக் மஹிந்திரா வங்கி பரிந்துரைக்கிறது.

நகைகள், ஆபரணங்கள் மற்றும் உலோக அடிப்படையிலான பொருட்களை லாக்கருக்குள் பிளாஸ்டிக் அல்லது மெட்டல் கண்டெய்னரில் வைத்து வைக்கலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பாதுக்காப்பு பொருட்கள் எல்லாம் வங்கி தரப்பிலிருந்து வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் எதற்கு பொறுப்பு?

வங்கிகள் தங்கள் அலட்சியம், ஊழியர்களின் மோசடி அல்லது புறக்கணிப்பு போன்றவற்றின் போது பொறுப்பேற்கின்றன.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நாம் செலுத்தும் வாடகையை விட நூறு மடங்கு வரை வங்கிகள் இழப்பீடு வழங்கும். எடுத்துக்காட்டாக, லாக்கரின் வாடகை ஆண்டுக்கு ரூ. 2000 எனில், எஸ்பிஐயின் கொள்கையின்படி வங்கி உங்களுக்கு ரூ.200,000 வரை இழப்பீடு வழங்கும்.

Bank locker rules : வங்கி லாக்கரில் எதையெல்லாம் வைக்கலாம்? புதிய விதிகள் என்னென்ன?
தங்கம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் தனித்துவமான நதி - எங்கே இருக்கிறது தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com