பல அதிசயங்கள் மற்றும் தீர்க்கப்படாத மர்மங்கள் நிறைந்த நாடு இந்தியா!
அதில் ஒன்று தான் இந்த சுபர்ணரேகா நதி. ஜார்க்கண்டின் அதிசய நதியாக இது அறியப்படுகிறது.
இந்த நதியின் தண்ணீரில் தூய தங்கம் இருப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்! இந்த நதி ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பாய்கிறது.
பல ஆண்டுகளாக இந்த ஆற்றின் மணலில் இருந்தும், அதன் கிளை நதியான கர்காரியிலிருந்தும் தங்கம் அதிக அளவில் கிடைத்துள்ளது.
474 கிமீ நீளம் கொண்ட இந்த நதி ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து கிட்டத்தட்ட 15 கிமீ தொலைவில் உள்ள நாக்டி கிராமத்தில் உள்ள ராணி சுவான் என்ற இடத்தில் இருந்து உருவாகிறது.
அங்கிருந்து, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் நுழைந்து பலேஷ்வரில் வங்கக் கடலில் கலக்கிறது.
இந்த நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள மர்மம் தீர்க்கப்படாமல் உள்ளது.
உள்ளூர் பழங்குடியின தொழிலாளர்கள் மணல் வடிகட்டுதல் மற்றும் ஆற்றுப்படுகையில் இருந்து தங்கத்தை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு மாதத்தில் ஆற்று மணலில் இருந்து 60 முதல் 80 தங்கத் துகள்களை பிரித்தெடுக்க முடியுமாம்.
பருவமழை தவிர, மணல் வடிகட்டுதல் மற்றும் தங்கத் துகள்களை சேகரிக்கும் பணிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகிறது.
இந்த துகள்கள் ஒரு அரிசி தானிய அளவு இருக்குமாம். சுபர்ணரேகா ஆங்கிலத்தில் ஸ்டிரீக் ஆஃப் கோல்ட் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ராஞ்சியில் பிஸ்கா என்ற கிராமம் உள்ளது. அங்கு தான் முதலில் தங்கம் ஆறு குறித்து தெரியவந்தது. முதலில் ஆற்றுப் படுகையிலும், பின்னர் அதன் மணலிலும் தங்கம் கிடைத்ததாக மக்கள் கூறுகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust