அசாமின் நல்பாரி நகரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்தனாரா கிராமத்திற்கு பயணம் செய்வது ஒரு கடினமான பயணமாகும், ஏனெனில் கிராமத்தை நகரத்துடன் இணைக்க இங்கு சாலைகளே இல்லையாம்.
ஒரே ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கும் பர்தானா நல்பாரியின் கோக்ரபார் வட்டத்தின் கீழ் உள்ளது. இந்த கிராமத்தில் பிமல் தேகா என்பவரின் குடும்பம் மட்டும் வசித்து வருகிறது.
குடும்பத்தில் தேகாவின் மனைவி அனிமா மற்றும் மூன்று குழந்தைகள் நரேன், திபாலி மற்றும் சூட்டி உள்ளனர்.
குடும்பத் தலைவரான தேகா, கடந்த 40 ஆண்டுகளாக இந்த தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் ஒரு குட்சா வீட்டில் வசித்து வருகிறார்.
“கடந்த 40 வருடங்களாக நான் இந்தக் கிராமத்தில் இருக்கிறேன். இங்கு வசித்த மற்ற கிராமவாசிகள், இங்கிருந்து வெளியேறினர்.
இடம் மாறுவதற்கு என்னிடம் வசதி இல்லாததால் என்னால் செல்ல முடியவில்லை. அருகிலுள்ள சந்தை அல்லது அலுவலகங்களை அடைய எங்களிடம் ஒரு படகு உள்ளது. எங்கள் கிராமத்தில் சாலைகள் எதுவும் இல்லை.
மழைக்காலத்தில், படகில் பயணிப்போம். பொறியாளர்களும், உள்ளாட்சி அதிகாரிகளும் எங்கள் கிராமத்திற்கு பலமுறை வந்தும், சாலை அமைக்க நிலத்தை அளந்தும், சாலை அமைக்க முடியாமல் போனது. எங்கள் உள்ளூர் பிரதிநிதி எங்களை சந்திக்கவில்லை” என்று தேகா கூறிகிறார்.
இப்படிப்பட்ட சூழலுக்கு மத்தியிலும், மூத்த மகனும் மகளும் பட்டதாரிகளாகவும், உயர்கல்வியை நாடுகின்றனர்.
நல்பாரியில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 16 பேருக்கு மட்டுமே.
பரந்து விரிந்த விவசாய வயல்களைக் கொண்ட இந்த கிராமத்தில் ஒரு காலத்தில் கணிசமான மக்கள் வசித்து வந்தனர். ஆனால், போக்குவரத்துக்கு ஏற்ற சாலை இல்லாததால், மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது.
”அதிக விவசாய விளைச்சலுக்கு பெயர் பெற்ற அசாமின் முன்னாள் முதல்வர் பிஷ்ணுராம் மேதி சில தசாப்தங்களுக்கு முன்பு பர்தனாரா கிராமத்திற்கு வந்தார்.
விவசாயம் தான் எங்களின் ஒரே வருமானம். நான் சில சமயங்களில் கிராமம் வெறிச்சோடியதாக உணர்கிறேன், ஒரு சாலை வந்தால் இந்த கிராமம் அதன் கடந்த காலப் பெருமையை மீண்டும் பெற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் பிமல் தேகா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust