நரேந்திர மோடி: பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை - என்ன நடக்கிறது அங்கே?

ஜனநாயகத்தன்மை அற்ற, சர்வாதிகாரப் போக்கு நிறைந்த இது போன்ற அணுகுமுறை அதிக காலம் நீடிக்காது என்றும் சமூக வலைதளத்தில் தன் கருத்தைப் பதிவு செய்திருந்தார் காங்கிரஸ் தலைவர் ஒருவர்.
மோடி: பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை - என்ன நடக்கிறது அங்கே?
மோடி: பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை - என்ன நடக்கிறது அங்கே?Twitter

உலகின் முக்கிய ஊடகங்களில் ஒன்றாகக் கருதப்படும் பி பி சி இந்திய அலுவலகங்களில், இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளனர்.

பி பி சி நிறுவனத்திற்கு இந்திய தலைநகரான டெல்லியிலும், இந்தியாவின் வணிகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையிலும் அலுவலகங்கள் இருக்கின்றன.

பிபிசி ஆவணப்படம்

சில வாரங்களுக்கு முன்புதான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையிலும், அவரை நோக்கி கேள்வி எழுப்பும் விதத்திலும் பி பி சி ஓர் ஆவணப்படத்தை வெளியிட்டது.

அந்த ஆவணப்படம் 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவர சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. தற்போது இந்திய பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி, அன்று குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தார்.

அந்த ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரத்தில் நரேந்திர மோடியின் பங்கு என்ன என்பது குறித்து 'India: The Modi Question' என்கிற தலைப்பில் வெளியான அந்த ஆவணப்படத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த ஆவணப்படம் தொடர்பாக, இந்திய அரசாங்கம் தங்கள் தரப்பு விளக்கத்தை கொடுக்க பிபிசி தரப்பில் கோரப்பட்ட போது, அதை மறுத்ததாகவும் பிபிசி கூறியுள்ளது.

வருமான வரித் துறை சோதனை

இந்த ஆவணப்படம் வெளியான பிறகு இன்று (பிப்ரவரி 14ஆம் தேதி) பி பி சி நிறுவனத்தின் டெல்லி அலுவலகம் மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துணையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனைக்கு பி பி சி நிர்வாகம் முழுமையாக ஒத்துழைக்கும் என்றும், இந்த பிரச்சனை கூடிய விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புவதாகவும் பிபிசி தரப்பில் இருந்து செய்தி அறிக்கை வெளியாகி உள்ளது.

மோடி: பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை - என்ன நடக்கிறது அங்கே?
பிரதமர் மோடி தான் குஜராத் கலவரத்துக்கு காரணமா? : பிபிசி ஆவணப்பட விவகாரம் - என்ன நடக்கிறது?

மோடி அரசு விமர்சனங்களுக்கு அஞ்சுகிறது

இந்தியாவை ஆட்சி செய்து வரும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, விமர்சனங்களை பார்த்து பயப்படுகிறது என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் பிபிசி அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனை குறித்து விமர்சித்துள்ளார்.

மேலும், தங்களை விமர்சிப்பவர்களை அச்சத்தில் அழ்த்த கையாளப்படும் இது போன்ற விஷயங்களை காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயகத்தன்மை அற்ற, சர்வாதிகாரப் போக்கு நிறைந்த இது போன்ற அணுகுமுறை அதிக காலம் நீடிக்காது என்றும் சமூக வலைதளத்தில் தன் கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

மோடி: பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை - என்ன நடக்கிறது அங்கே?
அதானி விவகாரம் : மோடியை துளைத்தெடுத்த கேள்விகள் - ராகுல் காந்தி உரை தமிழில்
வருமான வரித் துறை சோதனை
வருமான வரித் துறை சோதனை

பிபிசி ஊழல் நிறைந்த நிறுவனம்

பி பி சி நிறுவனம், உலகிலேயே மிகவும் ஊழல் நிறைந்த நிறுவனம் என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த செய்தி தொடர்பாளர் கௌரவ பாத்தியா கூறியுள்ளார். ஒரு நிறுவனம் விஷத்தை கற்காத வரை, இந்தியா எல்லா நிறுவனங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், பிபிசி நிறுவனத்திற்கு எதிராக வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்துவது எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு, முறையாக செய்யப்படும் ஒரு விஷயமே. இந்த சோதனைகள் மேற்கொள்ளப்படும் காலநேரத்திற்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

விமர்சனம் செய்பவர்களை துன்புறுத்துவதா?

எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பு, இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஆழ்ந்த கவலை அளிப்பதாகக் கூறியுள்ளது. அரசாங்கத்தின் கீழ் இயங்கும் முகமைகளை வைத்து, அரசு கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஆக்கப்பூர்வமாக விமர்சிக்கும் பத்திரிக்கை நிறுவனங்களை துன்புறுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் எடிட்டர் கில்ட் ஆப் இந்தியா கூறியுள்ளது.

மோடி: பிபிசி அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை - என்ன நடக்கிறது அங்கே?
மோடி - குஜராத் கலவரம் தொடர்பு பற்றிய BBC ஆவணப்படம் தடை - அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com