மோடி - குஜராத் கலவரம் தொடர்பு பற்றிய BBC ஆவணப்படம் தடை - அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
மோடி - குஜராத் கலவரம் தொடர்பு பற்றிய BBC ஆவணப்படம் தடை - அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?Twitter

மோடி - குஜராத் கலவரம் தொடர்பு பற்றிய BBC ஆவணப்படம் தடை - அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?

"பத்திரிக்கை சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை இந்தியா உள்பட உலகம் முழுவதும் எடுத்துரைக்க வேண்டிய தருணம் இது" என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Published on

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஊடகத்தின் ஆவணப்படத்தை இந்திய அரசு தடை செய்தது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது.

"பத்திரிக்கை சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை இந்தியா உள்பட உலகம் முழுவதும் எடுத்துரைக்க வேண்டிய தருணம் இது" என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் ப்ரைஸ், வாஷிங்டன் உலகம் முழுவதுமே பத்திரிக்கை சுதந்திரத்துக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

"கருத்து சுதந்திரம், மத நம்பிக்கை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் போன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்தும் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இப்படி தான் உலகம் முழுவதும் எங்கள் உறவை நிலைநாட்டுகிறோம். இந்தியாவிலும் கூட" என்று அவர் கடந்த புதன்கிழமை பேசினார்.

பிபிசி தயாரித்த ஆவணப்படம் 2002ம் ஆண்டு மோடி குஜரத்தின் முதலமைச்சராக இருந்த போது நடைபெற்ற கலவரத்துக்கு அவருக்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது.

மோடி - குஜராத் கலவரம் தொடர்பு பற்றிய BBC ஆவணப்படம் தடை - அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
பிரதமர் மோடி தான் குஜராத் கலவரத்துக்கு காரணமா? : பிபிசி ஆவணப்பட விவகாரம் - என்ன நடக்கிறது?

இதனை இந்திய அரசு "காலனிய மனோபாவத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, ஒரு சார்பாக எடுக்கப்பட்டது" என விமர்சித்தது.

மறுபுறம் இங்கிலந்து பிரதமர் ரிஷி சுனக், "குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்த பகுதியில் அநீதி நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்போம். ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனக் கூறியிருந்தார்.

மோடி - குஜராத் கலவரம் தொடர்பு பற்றிய BBC ஆவணப்படம் தடை - அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
PM Modi : BBC ஆவணப்படத்தை திரையிட JNU மாணவர்கள் முயற்சி - மின்தடை, கல்வீச்சால் பரபரப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com