பெங்களூரு என்றால் நம் நினைவுக்கு வருவது ஐ டி கம்பனிகளும், வித விதமான உணவுகளும், ஹை கிளாஸ் வாழ்க்கை முறையும். உடன் ஞாபகத்துக்கு வரும் மற்றொரு விஷயம் போக்குவரத்து நெரிசல். இந்த போக்குவரத்து நெரிசல் நம்மில் பலருக்கு தலைவலி தான். ஆனால் இங்கு ஒரு தம்பதிக்கு அதுதான் காதலின் நினைவுசின்னம். அவர்களது காதலின் பிறப்பிடம்.
ரெட்டிட் தளத்தில் MaskedManiac92 என்ற பெயரில் இருக்கும் பயனர் ஒருவர் தன் காதல் கதையை பகிர்ந்திருந்தார்.
அந்த நபர் ஒரு நாள் தோழியை வீட்டில் டிராப் செய்ய தன் பைக்கில் அழைத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எஜிபுரா மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருந்ததால் அவர்கள் சென்ற வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கிட்ட தட்ட ஒரு மணி நேரமாக சாலையில், நெரிசலில் காத்திருந்துள்ளார்கள்.
"இதனால் அவர்களுக்கு பசி அதிகமாக ஏற்பட்டு வேறு வழியை தேர்ந்தெடுத்துச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் உள்ள ஒரு உணவகத்தில் டின்னர் சாப்பிட்டுள்ளனர்."
அந்த தருணம் இருவருக்கும் பிடித்து, மூன்று வருடங்கள் டேட் செய்த பின்னர் திருமணம் செய்துகொண்டனர்.
"3 ஆண்டு டேட் செய்து, எங்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் எஜிபுரா மேம்பாலம் கட்டுமான பணி இன்னும் நிறைவடையவில்லை" என நகைச்சுவையாக பகிர்ந்திருந்தனர்.
இவரது கதை இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust