தனது உக்ரைன் காதலியை கரம் பிடித்தார் ரஷ்யாவை சேர்ந்த நபர் ஒருவர். இவர்களது திருமணம் இந்து முறைப்படி, தரம்சாலாவில் நடைபெற்றது.
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. முதலில் பொது மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படாத வண்ணம் அவர்களது போர் இருக்கும் என ரஷ்யா அறிவித்திருந்தாலும், பலிகளின் எண்ணிக்கை விண்ணைத் தொட்டது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது, பொது மக்கள் தங்களது இருப்பிடத்தைவிட்டு மற்ற நாடுகளுக்கு குடிபெயரத் தொடங்கினர்.
இரு நாட்டு அரசுகளும் சண்டையிட்டுக்கொண்டிருந்தாலும், ரஷ்யா - உக்ரைனை சேர்ந்த மக்கள் தங்களுக்கு பாகுபாடுகளின்றி தான் இருந்து வந்தனர். மேலும் போர் நிறுத்தப்படவேண்டும் என சொந்த நாட்டுக்கு எதிராக போர் கொடி தூக்கினர் ரஷ்ய நாட்டு மக்கள்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை
இந்நிலையில், பொது மக்களுக்கு இடையில் நிலவும் ஒற்றுமை தற்போது ஒரு படி மேலே ஏறியிருக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த செர்ஜி நோவிகோவ் என்ற இளைஞர், தனது காதலி எலோனா பிரமோகா என்பவரை கரம் பிடித்துள்ளார். எலோனா உக்ரைன் நாட்டுப் பெண். இவர்களுடையது காதல் திருமணம். எலோனா - செர்ஜியின் திருமணம் இந்தியாவில் தரம்சாலா என்னுமிடத்தில் இந்து முறைப்படி நடந்தது.
இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகிறார்கள். தரம்கோட் என்ற கிராமத்தில் வசித்து வந்த இவர்கள், கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி கரோடா கிராமத்திலுள்ள திவ்யா ஆசிரமத்தில் திருமணம் செய்துக்கொண்டனர்.
இந்து முறைப்படி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு, இருவரின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் கிராமத்தினரின் முன்னிலையில் அந்த திருமணம் நடைபெற்றது. இருவரும் சப்தபதி மந்திரங்களை ஆர்வத்துடன் கேட்டு, அதன் அர்த்தத்தை ஒருவர் அருகிலிருந்து கூற, ஆடல், பாடல்களுடன் பண்டிட் ராமன் சர்மா தலைமையில் திருமணம் நடந்தது. செர்ஜி பைஜாமா குர்தாவும், எலோனா லெஹங்காவும் அணிந்திருந்தனர்.
திருமணத்தில் எலோனாவின் வீட்டார் மிகுந்த ஆர்வத்துடன் கன்னியா தானமும் செய்து வைத்தனராம்! போருக்கு மத்தியில் நடந்தேறியுள்ள இத்திருமணம், பலரையும் நெகிழச் செய்துள்ளது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust