பெங்களூரு : பறக்கும் விமானத்தில் பீடி புகைத்த பெரியவர் - காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?

56 வயதான பிரவீன் குமார் ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு : பறக்கும் விமானத்தில் பீடி புகைத்த பெரியவர் - காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?
பெங்களூரு : பறக்கும் விமானத்தில் பீடி புகைத்த பெரியவர் - காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?Twitter
Published on

பெங்களூரு கெம்பேகௌடா விமான நிலையத்தில் எம்.பிரவீன் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 56 வயதாகும் இவர் பறக்கும் விமானத்தில் பீடி புகைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் பயணித்த பிரவீன் குமார் பறக்கும் ரயிலில் பீடி குடித்து சக பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 

டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை கூறுவதன் படி, பிரவீன் குமார்  ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது பெங்களூரு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு : பறக்கும் விமானத்தில் பீடி புகைத்த பெரியவர் - காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?
விமான கழிப்பறைகள் உண்மையில் சுகாதாரமானதா? முன்னாள் விமான ஊழியர் கூறும் அதிர்ச்சி தகவல்கள்

கெம்பேகௌடா விமானநிலைய வரலாற்றில் விமானத்தில் பீடி குடித்ததற்காக கைது செய்யப்படும் முதல்நபர் இவர்தான். 

குமார் காவல்துறையினரிடம் தான் ஒரு கட்டுமான தொழிலாளி என்றும் முதல்முறையாக விமானத்தில் பயணிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தனக்கு விமானத்தினுள் புகைப்பிடிக்கக் கூடாது என்ற விதிமுறைத் தெரியாது என்றும் குமார் விளக்கியுள்ளார். ரயிலில் வழக்கமாக செல்லும் குமார் அங்குள்ள கழிவறையில் புகைபிடிப்பதாகவும் விமானத்திலும் அதுபோல பிடிக்கலாம் என நம்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு : பறக்கும் விமானத்தில் பீடி புகைத்த பெரியவர் - காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?
வட கொரியா கிம் ஜாங் நம் மரணம்: அதிபரின் அண்ணனுக்கு மலேசிய விமான நிலையத்தில் என்ன நடந்தது?

இதுகுறித்து பெங்களூரு காவல்துறை அதிகாரி ஒருவர் பாதுகாப்பு சோதனைகளின் போது சிகரெட்களை கவனிக்காமல் விட்டது தான் குழப்பங்களுக்கு காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

விமான குழுவினரும் குமார் டாய்லெட் உள்ளே பீடி குடித்ததை தான் கண்டறிந்து புகார் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் குமார் விதிமுறைகள் தெரியாமல் பீடி குடித்திருந்தாலும் அவர் குறைந்தது ஒருவாரம் காவல்கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கும் என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு : பறக்கும் விமானத்தில் பீடி புகைத்த பெரியவர் - காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன?
மெட்ரோவில் சுய இன்பம் செய்த நபர்; காவல்துறை வழக்குப்பதிவு - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com