"எப்போதும் தனிமையாக இருக்கிறது!" 24 வயது இளைஞர் இணையத்தில் பகிர்ந்த கதை வைரல்

ஆண்டுக்கு 58 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இளைஞர் ஒருவர் தான் எப்போதும் தனிமையாக இருப்பதாக இணையத்தில் பகிர்ந்துள்ளார். தனது தனிமையை போக்க அறிவுரையும் கேட்டிருந்தார்
"எப்போதும் தனிமையாக இருக்கிறது!" 24 வயது இளைஞர் இணையத்தில் பகிர்ந்த கதை வைரல்
"எப்போதும் தனிமையாக இருக்கிறது!" 24 வயது இளைஞர் இணையத்தில் பகிர்ந்த கதை வைரல்twitter
Published on

நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தில் நம் அருகில் இருப்பவர்களுடன் பேசக் கூட நமக்கு நேரமில்லை. அல்லது அப்படி தான் நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

தனிமை, டிப்ரஷன், ஸ்ட்ரெஸ் போன்ற வார்த்தைகளின் பயன்பாடும் அதிகமாகிவிட்டது.

அதன் அதிக பயன்பாட்டுக்கு ஏற்றவாரே அதற்கான தீர்வை காண வேண்டும் என்ற விழிப்புணர்வும் இப்போது பரவலாக இருக்கிறது. மக்கள் வெளிப்படையாக பேசத் தொடங்கியிருக்கிறார்கள்

ஆண்டுக்கு 58 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் இளைஞர் ஒருவர் தான் எப்போதும் தனிமையாக இருப்பதாக இணையத்தில் பகிர்ந்துள்ளார். தனது தனிமையை போக்க அறிவுரையும் கேட்டிருந்தார்

கிரேப்வைன் என்கிற தளத்தில் 24 வயதாகும் மென்பொறியாளர் தன் கதையை பகிர்ந்திருந்தார்.

பெங்களூருவில் இருக்கும் ஃபாங்க் என்ற நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது வருடாந்திர சம்பளம் 58 லட்சம் ரூபாய்.

அவர் பகிர்ந்த கதையின் தலைப்பு, "வாழ்வில் நிறைவாக உணர்கிறேன் - feeling saturated in life" என்று இருந்தது. ஆனால், உள்ளிருக்கும் கதை எதிர்மாராக இருந்தது. கடந்த 2.9 ஆண்டுகளாக தனக்கு இருக்கும் தனிமையை கூறியிருந்தார்.

நான் எப்போதும் மிக அதிகமாக தனிமையாக உணர்கிறேன். நான் நேரத்தை செலவழிக்க எனக்கு காதலி இல்லை. என்னுடன் பணியாற்றுபவர்கள் எல்லாம் அவர் அவர் வாழ்க்கையில் பிசியாக இருக்கிறார்கள்.

"எப்போதும் தனிமையாக இருக்கிறது!" 24 வயது இளைஞர் இணையத்தில் பகிர்ந்த கதை வைரல்
"வாழும் காமராஜர் அண்ணாமலை" சிறுவன் பிடித்திருந்த பதாகை- வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?

என் வேலையும் ஒரே மாதிரியாக எந்த மாற்றமும் இல்லாமல் செல்கிறது. தொடக்கம் முதல் ஒரே வேலையில் இருக்கிறேன். அன்றாடம் ஒரே விஷயத்தை தான் செய்கிறேன். ஆனால், என் வேலையில் புதிய சவால்களோ, அடுத்த கட்டத்தை நோக்கி நகரவோ எனக்கு விருப்பமும் இல்லை" என்று பதிவிட்டிருந்தார்.

நான் என்ன செய்யவேண்டும் என எனக்கு யாராவது சொல்லுங்கள் என்றும் அவர் கேட்டிருந்தார்.

அவரது பதிவு பலரையும் பாதித்ததாக தெரிவித்திருந்தனர். மேலும் அவருக்கு அறிவுரைகளையும் வழங்கியிருந்தனர்

"எப்போதும் தனிமையாக இருக்கிறது!" 24 வயது இளைஞர் இணையத்தில் பகிர்ந்த கதை வைரல்
Depression Alert: விடுமுறை எடுப்பதில் குற்ற உணர்ச்சி ஏன்? - எச்சரிக்கும் ஆய்வு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com