Depression Alert: விடுமுறை எடுப்பதில் குற்ற உணர்ச்சி ஏன்? - எச்சரிக்கும் ஆய்வு!

சில ஊழியர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் விடுமுறைகளை உபயோக்கிக்க கூட தயங்குவார்கள். இதற்கு 'Guilt Vacation Syndrome' அல்லது விடுமுறை குற்ற உணர்ச்சி என்று பெயர்.
Depression Alert: விடுமுறை எடுப்பதில் குற்ற உணர்ச்சி ஏன்? - எச்சரிக்கும் ஆய்வு!
Depression Alert: விடுமுறை எடுப்பதில் குற்ற உணர்ச்சி ஏன்? - எச்சரிக்கும் ஆய்வு!Twitter

இந்திய ஊழியர்கள் சிலருக்கு விடுமுறை குற்ற உணர்ச்சி என்ற நோயின் பாதிப்பு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

எப்போதுமே அலுவலகத்துக்கு செல்பவர்களுக்கு இந்த நோய் இருக்கலாம். அவர்கள் அலுவலகத்திலேயே இருக்க நிர்பந்திக்கப்பட்டவர்களாக உணர்பவர்கள். தங்களுக்கு கொடுக்கப்படும் விடுமுறைகளை உபயோக்கிக்க கூட தயங்குவார்கள். இதற்கு 'Guilt Vacation Syndrome' அல்லது விடுமுறை குற்ற உணர்ச்சி என்று பெயர்.

அலுவலகத்தில் காணாமல் போயிவிடுவோமோ என்ற அச்சமும் வேலையில் இருக்கும் பாதுகாப்பின்மையும் எப்போது புரொடக்டிவாக இருப்பதற்கான அழுத்தமும் இந்த நோய் அல்லது ஒருவகை பாதிப்பு ஏற்பட காரணமாக இருக்கிறது.

Randstad இந்தியா நடத்திய புதிய ஆய்வில் இது குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 35 - 40 விழுக்காடு இந்தியர்கள் தங்களது மேலாளரிடம் விடுமுறை கேட்பதற்கு பதட்டமடைவதாகவும் அமெரிக்காவில் 39 விழுக்காடு இந்திய ஊழியர்களுக்கு விடுப்பு எடுப்பதில் மனநெருக்கடியும் குற்ற உணர்ச்சியும் ஏற்படுவதாகவும் ஆய்வு கூறியுள்ளது.

Employee
EmployeeTwitter

நிபுணர்கள் எச்சரிக்கை

இப்படி விடுமுறை எடுக்காமல் பணியாற்றுவது மன அழுத்ததையும் மன நெருக்கடியையும் ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஊழியர்கள் தங்களை புதுபித்துக் கொள்ளவாவது சரியாக விடுமுறைகளை எடுக்க வேண்டும் என எச்சரித்துள்ளனர். மேலும் விடுமுறைகள் எடுக்காமல் வேலை செய்வது சுயமரியாதையை பாதிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் சராசரியாக வேலை செய்பவர்களை விட சிறப்பாக பணியாற்ற முடிகிறது என்றால் நிச்சயமாக சில நாட்கள் விடுப்புக்கு தகுதி வாய்ந்தவர் தான் என்கின்றார்கள் நிபுணர்கள்.

Depression Alert: விடுமுறை எடுப்பதில் குற்ற உணர்ச்சி ஏன்? - எச்சரிக்கும் ஆய்வு!
ஒரு நல்ல சேதி - ஊழியர்கள் சம்பளத்தை 10% உயர்த்த இந்திய நிறுவனங்கள் திட்டம்: காரணம் என்ன?

விடுமுறைப் பற்றாக்குறை

மேலும் இந்தியர்கள் தாங்கள் விடுமுறையே இல்லாமல் வேலை செய்வதாக உணர்கின்றனர். 2018ம் ஆண்டு ஒரு ஆய்வு கூறுவதன் படி, 75% இந்தியர்கள் விடுமுறையே இல்லாமல் வேலை செய்வதாக உணர்வதாக கூறுகிறது.

இந்தியாவைத் தொடர்ந்து இந்த பட்டியலில் தென் கொரியா மற்றும் ஹாங்காங் நாடுகள் உள்ளன. உலகம் முழுவதும் 19 நாடுகளில் விடுமுறைப் பற்றாக்குறை உணரப்படுகிறது.

Depression Alert: விடுமுறை எடுப்பதில் குற்ற உணர்ச்சி ஏன்? - எச்சரிக்கும் ஆய்வு!
Depression : எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறியா? - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

தேவைப்படும் விடுமுறையை எடுப்பது உங்களது உரிமை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். விடுமுறையை எந்தவித தயக்கமும் இல்லாமல் நிர்வாகத்திடம் கேட்டுப் பெறும் பக்குவத்துடன் இருங்கள். நீங்கள் இல்லாத போது உங்களது வேலைகளில் தேக்கம் ஏற்படாமல் இருக்க உங்கள் உடன் பணிபுரிபவர்களிடமும் விடுமுறை குறித்து முன்னறிவித்துவிட்டால் நிச்சயமாக உங்களுக்கான விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம்.

Depression Alert: விடுமுறை எடுப்பதில் குற்ற உணர்ச்சி ஏன்? - எச்சரிக்கும் ஆய்வு!
டாடா டூ டாபர்: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே செயல்பட்டு வரும் 11 நிறுவனங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com