நவராத்திரி நாட்களில் இந்தியாவில் மிஸ் செய்யக்கூடாத நகரங்கள்
நவராத்திரி நாட்களில் இந்தியாவில் மிஸ் செய்யக்கூடாத நகரங்கள்twitter

நவராத்திரி நாட்களில் இந்தியாவில் மிஸ் செய்யக்கூடாத நகரங்கள்

இந்தியாவின் சில நகரங்களில் விமர்சையாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. எந்தெந்த இடங்கள்? இங்கு காணலாம்
Published on

இந்தியாவில் பண்டிகை காலம் நடந்துவருகிறது. அதாவது நவராத்திரி சீசன்.

வீடுகளில், கோவில்களில் பொம்மைகளை அடுக்கி அலங்கரித்து, பூஜைகள், நடன நிகழ்ச்சிகள், பாடல் கச்சேரிகள் நடைபெறும். இந்து மதத்தில் முக்கிய பண்டிகையான நவராத்திரி, 9 நாட்களுக்கு நடக்கும், சில இடங்களில் தசரா என்ற பெயரில் 10 நாட்கள் நடைபெறும்.

இந்தியாவின் சில நகரங்களில் விமர்சையாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. எந்தெந்த இடங்கள்? இங்கு காணலாம்

குஜராத்

குஜராத்தில் நவராத்திரி கோலாகலமாக இருக்கும். கர்பா, தாண்டியா வகை நடனங்களை இங்கு இந்த சமயத்தில் ஆடுவார்கள்.

இந்த நடனத்தில் ஆண், பெண், குழந்தைகள் பெரியவர், சிறியவர் என்ற பேதம் இல்லை. அனைவரும் பாரம்பரிய உடையணிந்து நடனமாடுவார்கள்.

தாண்டியா கோலாட்டம் என்றும் இங்கு அறியப்படுகிறது. கைகளில் கோல், அதாவது குச்சி பிடித்து, அதனை தட்டி தட்டி ஆடுவார்கள்.

”தாண்டியா ஆட்டமும் ஆட, குஜராத் குமரிகள் கூட...” பாடல் நினைவிருக்கிறதா?

உத்தரகாண்ட்

கடவுள்களின் நகரம் என்று அறியப்படும் இந்த உத்தரகாண்டில், துர்கை அம்மனுக்கு அலங்காரங்கள் செய்து பூஜைகள், வழிபாடுகள் நடக்கும்.

நைனா தேவி, கசர் தேவி, மான்சா தேவி போன்ற துர்கா கோவில்கள் களைக்கட்டும்.

இங்கு பாடல் கச்சேரிகள் நடைபெறும். பாரம்பரிய உணவு வகைகளையும் நாம் ருசிக்கலாம்

மேற்கு வங்கம்

இந்தியாவில் துர்கா பூஜை என்றால், முதலில் நினைவுக்கு வரும் இடம் கொல்கத்தா. துர்கையுடன், விநாயகரும் இங்கு இருப்பதால் கூடுதல் சிறப்பு.

சிந்தூர் கேலா, விசர்ஜன் போன்ற சடங்குகள் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

நவராத்திரி நாட்களில் இந்தியாவில் மிஸ் செய்யக்கூடாத நகரங்கள்
Bastar Dussera: சத்தீஸ்கரில் கொண்டாடப்படும் ’75 நாள்’ நவராத்திரி திருவிழா பற்றி தெரியுமா?

வாரணாசி

இந்து மதத்தவர்களின் புனித தலமான இங்கு, தகன சடங்குகளுக்கு மட்டுமல்லாமல், நவராத்திரி போன்ற விசேஷங்களுக்கும் பெயர் பெற்றது.

இங்கு ராம் லீலா என்ற பெயரில், இந்து மதக் கடவுளான ராமரின் கதையை நாடகமாக போடுவார்கள். இதை கண்டுகளிக்கவே இங்கு மக்கள் குவிகின்றனர்.

மேலும், இங்கு காட்களில் நவராத்திரி முடிவடையும் வரையில், அமர்ந்து ராம் சரித் மானஸை படிக்கின்றனர்

Dussera: மைசூரூவில் கொண்டாடப்படும் கோலாகல திருவிழா - சிறப்புகள் என்ன?
Dussera: மைசூரூவில் கொண்டாடப்படும் கோலாகல திருவிழா - சிறப்புகள் என்ன?twitter

மைசூரு

இங்கு நடைபெறும் தசரா உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ள வாடையார் வம்சத்தினர் கட்டி ஆண்ட, வாழ்ந்த மைசூரு அரண்மனையில், 10 நாட்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடக்கும். அரண்மனை முழுக்க வண்ணமயமான விளக்குகளால் அலங்கரித்து நடைபெறும் இந்த விழாவை காண கண்கள் இரண்டு போதாது.

இதை தவிர சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் 75 நாட்களுக்கு இந்த நவராத்திரி திருவிழா நடக்கிறது.

இந்த லாங் வேக்கெண்டில், இந்த இடங்களில் ஏதாவது ஒன்றிற்கு சென்று வாருங்கள்!

நவராத்திரி நாட்களில் இந்தியாவில் மிஸ் செய்யக்கூடாத நகரங்கள்
Dussera: மைசூரூவில் கொண்டாடப்படும் கோலாகல திருவிழா - சிறப்புகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com