கடற்கரை முதல் கோவில்கள் வரை- ஒடிசாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?
கடற்கரை முதல் கோவில்கள் வரை- ஒடிசாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?Twitter

கடற்கரை முதல் கோவில்கள் வரை- ஒடிசாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?

இம்மாநிலத்தில் கடற்கரைகள், கோவில்கள், ஏரிகள் என பல இடங்கள் சுற்றுலாத் தலமாக செயல்படுகிறது. இது தவிர சுற்றுலாப் பயணிகளால் அறியப்படாத ஒரு சில ரகசிய இடங்களும் ஒடிஷாவில் இருக்கிறது.
Published on

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான ஒடிஷா அதன் பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலைகள், வரலாறு, மொழி, கலை, இசை மற்றும் நடன வடிவங்களுக்கு பிரபலமான இடமாக இருக்கிறது.

அந்த வகையில் ஒடிசாவில் அமைந்துள்ள ஜெகந்நாதர் கோவில், சூரிய கோவில் ஆகியவை அதன் கட்டிடக்கலைக்கு சிறந்த சான்றாக உள்ளது.

இத்தகைய பெருமைகள் வாய்ந்த இம்மாநிலத்தில் கடற்கரைகள், கோவில்கள், ஏரிகள் என பல இடங்கள் சுற்றுலாத் தலமாக செயல்படுகிறது. இது தவிர சுற்றுலாப் பயணிகளால் அறியப்படாத ஒரு சில ரகசிய இடங்களும் ஒடிஷாவில் இருக்கிறது.

விடுமுறைக்கு ஏற்றபடி ஆன்மீக பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் ஒடிஷாவில் உள்ள பூரி என்ற இடத்திற்கு பயணம் மேற்கொள்ளலாம். இந்த இடத்தில் மனதுக்கு இதம் அளிக்கும் கடற்கரைகள், பூங்காக்கள், முதல் பூரி ஜெகன்நாதர் கோவில் என பல இடங்கள் இருக்கிறது. இந்த இடத்திற்கு சென்றால் ஊரை சுற்றிப் பார்த்தபடியும் இருக்கும், கடவுளையும் தரிசித்தபடியும் ஒரு நல்ல அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆன்மீகத்திற்கான இடங்களைப் பார்த்த பிறகு, உங்கள் பயணத்தை ஸ்வரசியமாக மாற்றுவதற்கு சிம்பாலில் உள்ள தேசிய பூங்கா சிறந்த இடமாகும்.

இந்தியாவின் 7 ஆவது பெரிய தேசிய பூங்காவாக செயல்படும் இந்த இடத்தில் ஆசிய யானைகள், வங்காளப் புலிகள், சௌசிங்கா மற்றும் கவுர் ஆகிய மிருகங்கள் இருக்கிறது. இந்த தேசிய பூங்கா 40 வகையான பாலூட்டிகள், 30 வகையான ஊர்வன மற்றும் 240 வகையான பறவைகளின் உறைவிடமாக இருக்கிறது.

கடற்கரை முதல் கோவில்கள் வரை- ஒடிசாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?
Travel: நந்தி மலை முதல் விதான் சௌதா வரை - பெங்களூரில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ்

கலை மற்றும் பாரம்பரியத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களை ரகுராஜ்பூர் கலை கிராமம் நிச்சயமாக கவரும். இந்த இடத்தில் ஒடிஷாவின் கிராமங்களில் இருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், பனை ஓலை ஓவியங்கள் போன்றவை பாதுகாக்கப்படுகிறது.

இந்த இடத்தில் இருக்கும் கலைகள் பயணிகளுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.நம்ம ஊரின் ஊட்டி, கொடைக்கானலைப் போல சிறந்த இயற்கை அமைப்பைக் கொண்ட ஒரு இடம் கோராபுட் மாவட்டம்.

ஓடிஷாவின் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கும் இந்த கோராபுட் நகரத்தை சுற்றிலும் அடர்ந்த காடுகள், அதனை உள்ளடக்கிய தேவ்மாலி மலைத்தொடர்கள், குப்தேஷ்வர் குகைகள், தூத்மா அருவி என பல இடங்கள் உள்ளது. இந்த இடத்தை இயற்கைப் பிரியர்கள் நிச்சயம் விசிட் அடிக்க வேண்டும்.

கடற்கரை முதல் கோவில்கள் வரை- ஒடிசாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன?
உலகின் முதல் 'Phone இல்லாத' சுற்றுலா தலமாக மாறும் தீவு - என்ன காரணம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com