Travel: நந்தி மலை முதல் விதான் சௌதா வரை - பெங்களூரில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ்

இந்தியாவின் தொழில்நுட்ப நகரமாக கருதப்படும் பெங்களூரு, மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது.
Travel: நந்தி மலை முதல் விதான் சௌதா வரை- பெங்களூரில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ்
Travel: நந்தி மலை முதல் விதான் சௌதா வரை- பெங்களூரில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ்Twitter

சென்னையில் இருந்து 334 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெங்களூரு சிட்டி கர்நாடகா மாநிலத்தின் தலைநகராகும்.

இந்த நகரம் மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இந்தியாவின் தொழில்நுட்ப நகரமாக கருதப்படும் பெங்களூரு, மக்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சுற்றுலாத் தலங்களை கொண்டுள்ளது.

பெங்களூரு அரண்மனை

சமராஜ உடையார் என்பவரால் கடந்த 1887 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த பெங்களூரு அரண்மனை. இந்த அரண்மனையில் ராஜ வம்சத்தை சேர்ந்தவர்கள் இன்னும் வசித்து வருகின்றனர். இங்கிலாந்தில் உள்ள வின்ஸ்டர் கோட்டையின் பிரதிபலிப்பாக கட்டப்பட்டுள்ள பெங்களூரு அரண்மனை சுற்றுலாப் பயணிகளின் கண்ணைக் கவருகிறது.

லால் பக் தாவரவியல் பூங்கா

பெங்களூருவில் சுற்றிப் பார்க்க வேண்டிய பிரபலமான இன்னொரு இடம் லால் பக் தாவரவியல் பூங்கா. லால்பாக் நகரின் மையப்பகுதியில் 240 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த இடம் பொன்சாய் தோட்டம், பெரிய பாறை, கெம்பேகவுடா காவற்கோபுரம், மலர் கடிகாரம், செம்பருத்தி தோட்டம் ஆகியவற்றிற்கு பிரபலம்.

கப்பன் பூங்கா

பெங்களூருவில் அமைந்துள்ள கப்பன் பூங்கா நன்கு அழகுபடுத்தப்பட்ட புல்வெளிகள் நிறைந்த ஒரு இடமாகும். மனதிற்கு இன்பம் தரும் இந்த பூங்காவும் பயணிகள் கட்டாயம் சுற்றிப் பார்க்க வேண்டிய ஒரு இடம்.

நந்தி மலை

இயற்கை காதலர்களை ஈர்க்கும் இடம் பெங்களூருவில் உள்ள நந்தி மலை. மலையின் உச்சியில் அமைந்துள்ள நந்தி கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்கள் பார்வையாளர்களை கவருகிறது.

ஜவர்ஹர்லால் நேரு பிளானட்டோரியம்

நட்சத்திர மண்டலம் மற்றும் விண்வெளி மீது ஆர்வம் உள்ளவர்கள் சாங்கி ரோடு, ஹை கிரவுண்ட்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜவர்ஹர்லால் நேரு பிளானட்டோரியத்தை பார்வையிடலாம். இந்த பிளானட்டோரியம் நிச்சயமாக பார்வையாளர்களை கவரும்.

பன்னர்கட்டா நேஷனல் பார்க்

வன விலங்குகளுக்கான சொர்க்கம் என்று சொல்லக்கூடிய பன்னர்கட்டா நேஷனல் பார்க் குழந்தைகளுக்கான சிறந்த பொழுதுபோக்கு தளமாகும். இந்த நேஷனல் பார்க் வனவிலங்கு சஃபாரிக்கும் பிரபலமானது.

Travel: நந்தி மலை முதல் விதான் சௌதா வரை- பெங்களூரில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ்
கண்ணாமூச்சி முதல் மாட்டுத்தாவணி வரை : வித்தியாசமான பெயர்களை கொண்ட ஊர்கள் - என்னென்ன?

தேவனஹள்ளி கோட்டை

பெங்களூருவில் பண்டைய கால வரலாறு, கட்டிடக்கலை, நாகரிகம் இவை அனைத்தையும் தெரிந்து கொள்வதற்கான ஒரே இடம் தேவனஹள்ளி கோட்டை. இந்த இடமும் பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

விதான் சௌதா

இந்தோ சாராசெனிக் மற்றும் திராவிட கட்டிடக்கலைக்கு சான்றாக திகழ்கிறது பெங்களூருவின் விதான் சௌதா. இது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய சட்டமன்ற கட்டிடமாகவும் இருக்கிறது.

செயின்ட் மேரிஸ் தேவாலயம்

1882 ஆம் ஆண்டு கட்டப்பட்ட செயின்ட் மேரிஸ் தேவாலயம் பார்வையாளர்களை ஈர்க்கும் முக்கியமான இடமாகும். இந்த கட்டிடம் இடைக்கால கட்டிடக்கலையின் சிறந்த சான்றாக திகழ்கிறது.

Travel: நந்தி மலை முதல் விதான் சௌதா வரை- பெங்களூரில் மிஸ் செய்யக்கூடாத ஸ்பாட்ஸ்
Travel: ”அலைவார் அவர்தானே அடைவார்” அமைதியை தேடுவோரா நீங்கள்? சுப்பர் spots!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com