மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் இருக்கும் லோனாவாலா மனதுக்கு இதமான இயற்கை காட்சிகளை வழங்கும் தலமாகும். பச்சை நிரம்பிய இந்த பகுதி பிரபலமானதும் கூட.
இங்கிருக்கும் மலைகள், சில்லென்ற வானிலை ஒவ்வொருமுறை செல்லும்போதும் மெய் சிலிர்க்க வைக்கும். இங்கு ஆச்சரியமளிக்கக் கூடிய இடங்கள் பல இருந்தாலும் நாம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பாஜா குகைகள் பற்றிதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
மேற்கு தொடர்ச்சியின் பல்வேறு பகுதிகளில் பௌத்த கலாச்சாரமும் கலைநயமும் செழித்து வளர்ந்திருக்கிறது. இதற்கு சான்றாகவே லோனாவாலாவில் இந்த பாஜா குகைகள் இருக்கின்றன.
சஹ்யாத்ரி மலைகள் எனப்படும் இந்த பகுதியில் புல் தவளை (Bull Frog) முதல் மலபார் அணில்கள் வரை பலவிதமான உயிர்கள் வாழ்கின்றன.
இந்த உயிரினங்களைப் பார்வையிட வருபவர்கள் போலவே இந்த குகையைக் காணவும் மக்கள் குவிவது வழக்கம். இந்த பகுதியில் பெரிய அளவில் பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட குகைகள் இருக்கின்றன.
இந்த பாஜா குகை மட்டுமல்லாமல் அருகாமையில் இருக்கும் கர்லா குகைகள் மற்றும் பெட்சா குகைகளும் புத்த குகை வடிவங்களுக்கு சான்றாக திகழ்கின்றன.
இந்திய வரலாற்றை முழுவதுமாக புரிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயமாக இந்த இடத்தைச் சென்று பார்வையிட வேண்டும்.
தக்காண பீடபூமியில் இருக்கும் பழமையான புத்த பாறை குகைகள் இவை. 22 பெரிய பாறைகள் வெட்டப்பட்டு இவை உருவாகியிருக்கின்றன.
இவற்றை வழிபாட்டு அரங்குகள், மடாலய குகைகள் (The Vihara caves) என இரண்டு பகுதிகளாக பிரிக்கின்றனர். இந்த ஒவ்வொரு குகையும் தனித்துவமானவை. 12வது குகை மட்டும் பிரம்மாண்டமானதாக இருக்கிறது, இது முக்கிய வழிபாட்டு அரங்காக இருந்திருக்கலாம் என்கின்றனர்.
குகை 12 நன்கு அலங்கரிக்கப்பட்டதாக உள்ளது. இந்த குகைகள் ஆரம்ப கால பௌத்த கலாச்சாரத்தின் பகுதிகளாக இருக்கின்றன.
மடாலய குகைகளில் துறவிகள் வசித்துள்ளனர். துறவிகளின் எளிமையான வாழ்வையும் ஆன்மிக பழக்கவழக்கங்களைப் பற்றிய பார்வையையும் பெறலாம்.
இதுபோன்ற குகைகளில் துறவிகள் வாழ்வது மட்டுமல்லாமல், பல மைல் தூரம் பயணம் செய்யும் துறவிகளுக்கு தங்குமிடமாகவும் இருந்திருக்கின்றன.
உலகின் பல்வேறுபட்ட கட்டிடக்கலைகளை ரசிப்பவர்களுக்கு இந்த பாறை கட்டிடக்கலை அதியற்புத காட்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust