வெளிநாட்டு பயணம்: சிக்கனமாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள 5 டிப்ஸ்!

ஒருவேளை பணம் கொடுத்து ஒரு சுற்றுலாவுக்கு சென்றாலும் அது கொடுக்கும் பணத்துக்கு நிறைவாக இருக்குமா? என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். ஒரு சர்வதேச சுற்றுலாவை குறைந்த செலவில் அதே நேரத்தில் கொடுக்கும் பணத்துக்கு ஏற்றபடி மேற்கொள்ள 5 டிப்ஸ் இதோ!
 வெளிநாட்டு பயணம்: சிக்கனமாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள 5 டிப்ஸ்!
வெளிநாட்டு பயணம்: சிக்கனமாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள 5 டிப்ஸ்!Twitter

வேறெந்த பயணத்தையும் விட அதிக மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருவது சர்வதேச பயாணங்கள் தான். நமக்கு பரிட்சயமில்லாத ஊரில் பரிட்சயமில்லாத மனிதர்களுடன் சுற்றித்திரிவதைவிட சுகமான ஒன்று இருக்குமா?

புதிரான கலாச்சாரங்களை அறிவதும் புதிய நிலப்பரப்பில் நடப்பதும் ஒவ்வொரு பயணியின் கனவும் கூட. ஆனால் சர்வதேசபயணங்களுக்கு திட்டமிடுவதில் அனைவருக்கும் தயக்கம் இருப்பதற்குக் காரணம் பணம் தான்!

ஒருவேளை பணம் கொடுத்து ஒரு சுற்றுலாவுக்கு சென்றாலும் அது கொடுக்கும் பணத்துக்கு நிறைவாக இருக்குமா? என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். ஒரு சர்வதேச சுற்றுலாவை குறைந்த செலவில் அதே நேரத்தில் கொடுக்கும் பணத்துக்கு ஏற்றபடி மேற்கொள்ள 5 டிப்ஸ் இதோ!

யாருடன் செல்லப் போகிறீர்கள்?

ஒரு வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்கிறீர்கள் என்றால் அது உங்களுக்கு மிகவும் மகிழ்வான ஒன்றாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் சரியான பயணக் கூட்டாளியைக் கூட்டிக்கொண்டு வர வேண்டும்.

உங்கள் அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் நபர் என்பதனால் பயணத்திலும் அவர் சரியான துணையாக இருப்பார் என எண்ணிவிடக் கூடாது. உங்கள் குடும்பதினரும் செல்ல முடிந்தால் சிறப்பு, இல்லை என்றால் உங்களுக்கு நெருக்கமான நண்பர்களைக் கூட்டிச்செல்லுங்கள்.

எதுவும் சரியாக வரவில்லை என்றால் தனியாக செல்வதே சிறப்பாக இருக்கும்.

செலவு திட்டமிடல்

உங்களால் எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதை தெளிவாக அறிந்த பிறகு பயணத்துக்கு திட்டமிடத் தொடங்க வேண்டும். உங்கள் பயணச் செலவுகள், உணவுகள், ஷாப்பிங் மற்றும் பிற செயல்பாடுகளுக்கு பணத்தை சரியாக பிரிக்க வேண்டும்.

சரியாக ஒவ்வொரு செலவையும் ஆராய்ந்து திட்டமிட்டால் பயணத்தின் போது தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படாது.

 வெளிநாட்டு பயணம்: சிக்கனமாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள 5 டிப்ஸ்!
Atlas : 6வது வாரம் முதல் பயணம், 23 நாடுகளை சுற்றிய 11 மாதக் குழந்தை - ஒரு கியூட் ஸ்டோரி

குறைவான பொருட்கள்

பயணத்தின் போது பெரிய பெட்டிகளை, பேக்குகளை வைத்திருந்தால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பயணிப்பது மிகவும் கடினமானதாக போய்விடும்.

இதனால் நம்மால் முடிந்தவரை குறைவான பொருட்களை வைத்திருப்பது நலம். பயணத்துக்கு ஏற்ற லேசான உடைகளை அணியலாம். இது உங்கள் பயணத்தில் சிரமத்தைக் குறைக்கும்.

உள்ளூர்வாசியாக இருங்கள்!

ஒரு வெளிநாட்டுக்கு செல்லும் போது நாம் அந்த நாட்டு கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் தெரிந்துகொள்ள முடியும். நம் தயக்கங்களை உடைத்தெறிந்து அங்குள்ள மக்களுடன் பழகும் போதுதான் நமக்கு திரும்பி வந்ததும் நினைவில் தங்கும் நினைவுகள் கிடைக்கும்.

அந்தந்த ஊர் உணவுகளை உண்பது செலவைக் குறைப்பது மட்டுமல்லாமல், சிறந்த அனுபவமாகவும் அமையும். நம்மால் முடியவே முடியாது எனும் பட்சத்தில் குறைந்தபட்சம் ருசியாவது பார்க்க வேண்டும்.

 வெளிநாட்டு பயணம்: சிக்கனமாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள 5 டிப்ஸ்!
உலகம் முழுவதும் பயணிக்க இவர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் தேவையில்லையா? யாருக்கு இந்த சலுகை?

சாகசங்களை மேற்கொள்ளுங்கள்!

ஒரு வெளிநாட்டுப்பயணம் என்பது உங்கள் வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் அதிரஷ்டம் போன்றது. பலரும் ஒரு நாட்டுக்கு அடிக்கடி சென்றுவரும் வசதியுடன் இருப்பதில்லை.

உங்கள் பயம் காரணமாக ஏதாவது சாகசத்தை மிஸ் செய்தீர்கள் என்றால் அதற்கு நீங்களே பின்னாளில் வருத்தப்படுவீர்கள். அதனால் அச்சமில்லாமல் எல்லா அட்வென்சர்களிலும் கலந்துகொள்ளுங்கள்.

 வெளிநாட்டு பயணம்: சிக்கனமாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள 5 டிப்ஸ்!
இந்தியர்கள் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் - எப்படி?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com