திருமணத்திற்கு பயந்து வீட்டை விட்டு ஓடிய சிறுமி: காவல் அதிகாரியாக திரும்பி வந்த ஆச்சரியம்!

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, 5ஆண்டுகளுக்கு பின் காவல் அதிகாரியாக திரும்பி வந்த சம்பவம் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.
Bihar : 16-year-old girl who ran away from home to avoid marriage joins Delhi Police
Bihar : 16-year-old girl who ran away from home to avoid marriage joins Delhi PoliceTwitter

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 16 வயது சிறுமி, கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தற்போது அந்த பெண் டெல்லி போலீசில் பயிற்சி பெற்று வருகிறார்.

ஸ்டேஷனில் நிலுவையில் உள்ள வழக்குகளை பரிசீலனை செய்தபோது இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

investigation
investigationTwitter

ஜூன் 12, 2018 அன்று மஹ்பூர் கிராமத்தில் வசிக்கும் சிறுமி, உள்ளூர் சந்தைக்கு சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாக வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

புகாரின் அடிப்படையில் மூன்று பேர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை விசாரித்தனர்.

போலீசாருக்கு கடத்தல் குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் தொடர் தேடுதலில் காணாமல் போன சிறுமி, கிடைத்துவிட்டார்.

கடந்த 2018ம் ஆண்டில் 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்துள்ளனர்.

Bihar : 16-year-old girl who ran away from home to avoid marriage joins Delhi Police
”மாடலிங் வேண்டாம்” : உலகின் "மிக அழகான காவலர்" என்று அழைக்கப்படும் டயானா - யார் இவர்?
Marriage (Rep)
Marriage (Rep)Pexels

இதனால் வீட்டை விட்டு தப்பித்து டெல்லி சென்ற சிறுமி அங்கு தங்கி படித்து பல போட்டி தேர்வுகளை எழுதியுள்ளார். சமீபத்தில் டெல்லி கான்ஸ்டபிள் தேர்வில் தேர்ச்சி பெற்று காவலர் பணிக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார் அந்த பெண்.

அந்த பெண்ணை யாரும் கடத்தவில்லை என்று அந்த பெண்ணே அளித்த விளக்கத்தின் பேரில் இந்த புகார் முடித்துவைக்கப்பட்டது.

வீட்டை விட்டு வெளியேறிய பெண் காவல் அதிகாரியாக திரும்பி வந்த சம்பவம் பலரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

Bihar : 16-year-old girl who ran away from home to avoid marriage joins Delhi Police
தனது மகளையே திருமணம் செய்த 62 வயது முதியவர்: வைரலாகும் வீடியோ - உண்மை என்ன? | Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com