”மாடலிங் வேண்டாம்” : உலகின் "மிக அழகான காவலர்" என்று அழைக்கப்படும் டயானா - யார் இவர்?

உலகின் மிக ஆபத்தான நகரமாக முன்னர் கருதப்பட்ட மெடலின் தெருக்களில் ரோந்து பணிக்கு சென்று அழகு மட்டுமின்றி துணிச்சல் உள்ள பெண் என்ற பெயரையும் பெற்றார்.
Diana Ramirez
Diana RamirezTwitter
Published on

'பியூட்டி வித் ப்ரைன்ஸ்' என்ற பழமொழியை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம், இந்த மேற்கோளுக்கு டயானா ராமிரேஸ் மிகவும் பொருத்தமானவராக இருக்கிறார்.

உலகின் "மிக அழகான காவலர்" என்று அழைக்கப்படும் டயானா கொலம்பியாவின் மெடெல்லினைச் சேர்ந்தவர்.

பெண் போலீஸ் அதிகாரியாக இருக்கும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டதட்ட நான்கு லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

உலகின் மிக ஆபத்தான நகரமாக முன்னர் கருதப்பட்ட மெடலின் தெருக்களில் ரோந்து பணிக்கு சென்று அழகு மட்டுமின்றி துணிச்சல் உள்ள பெண் என்ற பெயரையும் பெற்றார்.

மாடலாகவோ அல்லது சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சிங் செய்வதற்கோ தனது வேலையை விடமாட்டேன் என்றும் மாடலிங்கை விட ஒரு குற்றத்தை எதிர்த்துப் போராடும் காவலராக இருக்க விரும்புவதாக டயானா கூறியுள்ளார்.

தனது தொழிலை தேர்வு செய்ய இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்தற்கு,

Diana Ramirez
கைது செய்ய வந்த போலீஸ்... தப்பிக்க தேனீக்களை திறந்துவிட்ட பெண்!

எனக்கு மீண்டும் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைத்தால், நான் தயங்காமல் மீண்டும் காவல்துறை அதிகாரியாகவே மாறுவேன் என்று கூறினார். ஏனென்றால் தேசிய காவல்துறைக்கு தான் கடன்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

NDTV அறிக்கையின்படி,

டயானா அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பதிவேற்றி வருகிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் சமீபத்தில் இன்ஸ்டாஃபெஸ்ட் விருதுகளில் ஆண்டின் சிறந்த போலீஸுக்கு பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Diana Ramirez
5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கடத்திய எலிகள், தேடி பிடித்த போலீஸ் - ஓர் அடடா சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com