பல இந்திய குடும்பங்களால் விரும்பி உண்ணப்படும் இனிப்பு வகைகளில் ஒன்றாக ரசகுல்லா இருக்கிறது. திருமணங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் வீட்டில் இரவு உணவிற்குப் பிறகு அவை முக்கியமான இடத்தை பிடித்திருக்கும் ஒரு இனிப்பு பண்டமாகும். என்றாவது ஒரு நாள் பல ரயில்கள் திருப்பி விடப்பட்டதற்கும், ரத்து செய்யப்பட்டதற்கும் இந்த ரசகுல்லா காரணமாக இருக்கும் என்று யாராவது நினைத்திருப்போமா?
ஆம், அது தான் நடந்திருக்கிறது பீகாரில்!
பராஹியா ரயில் நிலையத்தில் பத்து ரயில்களை நிறுத்தக் கோரி பீகாரின் லக்கிசராய் பகுதியைச் சேர்ந்த பல உள்ளூர்வாசிகள் சுமார் 40 மணி நேரம் போராட்டம் நடத்தினர். பல ரயில்களின் இயக்கத்தை நிறுத்துவதற்காக ரயில் தண்டவாளங்களில் கூடாரம் போட்டனர்.
இந்த சம்பவத்தால், ஹவுரா-டெல்லி ரயில் பாதையில் நூற்றுக்கணக்கான ரயில்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் திருப்பி விடப்பட்டன.
லக்கிசராய் மாவட்ட மாஜிஸ்திரேட் சஞ்சய் குமார் கூறுகையில், ”பராஹியாவில் பல எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு நிறுத்தம் இல்லை, எனவே எல்லா ரயில்களும் இங்கே நின்று போக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரயில் நிலையத்தில் நிறைய பேர் தண்டவாளத்தில் அமர்ந்ததாகக் கூறினார். உள்ளூர் பயணிகளின் வசதிக்காக ரயில்கள் கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் விசயம் அதுவல்ல. பஹாரியா ரசகுல்லாவிற்கு பெயர் போன ஒரு ஊர். இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட ரசகுல்லா கடைகள் இருக்கின்றன. பல ஊர்களில் இருந்தும் ரசகுல்லாவிற்காக மக்கள் இந்த ஊருக்கு வந்து போகிறார்கள். எக்ஸ்பிரஸ் ரயில்கள் இங்கு நிற்காமல் செல்வதால் ரசகுல்லா வியாபாரம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு.
இறுதியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதினைந்து நாட்களுக்குள் குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மேலும், ஒவ்வொரு ரயிலும் அந்த நிலையத்தில் சில நிமிடங்கள் நின்று செல்லும் என்றும் உறுதியளித்திருக்கிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu