தமிழகத்தில் ஊரறிந்த சுற்றுலாத் தளங்கள் ஏராளம் இருக்கின்றன. ஆனால் சில சுற்றுலாத்தலங்கள் பெரிய அளவில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருப்பதையும் காண முடியும். அப்படிப்பட்ட 5 இடங்கள் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எழில் கொஞ்சும் இவர் தமிழ் நிலப்பரப்பின் இயற்கை வைரங்கள் எனலாம்.
திருவண்ணாமலை அருகில் உள்ள கல்வராயன் மலைகளில் பல சுற்றுலாத் தலங்கள் இருக்கிறது. நீர்வீழ்ச்சிகள், நீரோடை, ஆறுகள் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ட்ரெக்கிங் செய்ய விரும்புகிறவர்களுக்கு கல்வராயன் மலை சிறந்ததாக இருக்கும். இது ‘ஏழைகளின் மலைப் பிரதேசம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இது சென்னையிலிருந்து கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
பிச்சாவரம் காட்டுப் பகுதியின் பரப்பளவு, 2,800 ஏக்கர். இந்தப் பகுதி சிறு, சிறு தீவுகள் நிறைந்தது. இந்தக் காடுகளில் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான பறவையினங்கள் உள்ளன. இது, தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இந்த மாங்குரோவ் காடுகள் மற்றும் கால்வாய்களை, படகுகள் மூலம் சென்று பார்க்க வனத்துறை, சுற்றுலாத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து பிச்சாவரம் 228 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. பயணம் 5 மணி நேரம். கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகச் செல்லலாம். சிதம்பரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி.
கூகுளில் ஏழாவது சொர்க்கம் என்று தேடினால் நமக்குக் கிடைக்கும் இடம் வால்பாறை. இங்கு சராசரியாகப் பகலில் 17 டிகிரியும் இரவில் 12 டிகிரிக்கு குறைவாகவும் தட்பவெப்ப நிலை பதிவாகிறது. துள்ளி ஓடும் அருவிகள், அவற்றைச் சேகரிக்கப் பயன்படும் அணைகள், பசுமை மாறாத பள்ளத்தாக்குகள், எங்குத் திரும்பிப் பார்த்தாலும் பச்சைப் பசேல் என்று இருக்கும் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் எனச் சொர்க்கம் போல இருக்கிறது வால்பாறை.
வால் பாறை சென்னையிலிருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது
அழிக்கப்பட்ட இடங்களைப் பார்த்திருக்கிறீர்களா? செல்லரித்துக் கிடக்கும் கட்டடங்களைக் காண வேண்டுமானால் தனுஷ் கோடி போகலாம்! மிக அமைதியான அந்த பகுதியில் பாழடைந்த கோவில்கள், ரயில் நிலையங்களைக் காணலாம். ராமேஸ்வரத்தில் சுற்றிப் பார்க்கப் பல கோவில்களும் சுற்றுலாத் தலங்களும் இருக்கின்றன.
வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிறுமலை கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. மக்கள் வசித்து வரும் சிறுமலைக்கு 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து பயணிக்க வேண்டும். போகிற வழியில் பலா, வாழைத் தோட்டங்களைப் பார்த்து செல்லலாம். காய்கறித் தோட்டங்களையும் பார்க்கலாம். சித்தர்கள் வாழ்ந்த மலை என்பதால் இங்கு அதிகமான மூலிகைச் செடிகள் உள்ளன.
கொடைக்கானல், ஊட்டி போல சிறுமலை கான்கிரீட் காடாகவில்லை. ஆனாலும், குட்டி குட்டி ரிசார்டுகள் உள்ளன. சிறு வீடுகளில் பேயிங் கெஸ்டாகவும் தங்கலாம். சிறுமலை சென்னையிலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu