பெண்கள் கழிவறையை கைகளால் சுத்தம் செய்த பாஜக எம்.பி - இணையத்தில் வீடியோ வைரல்

ரேவா தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா. இவர் தன் கைகளை பயன்படுத்தி, பெண்கள் பள்ளியில் இருக்கும் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
கழிவறையை கைகளால் சுத்தம் செய்த பாஜக எம் பி
கழிவறையை கைகளால் சுத்தம் செய்த பாஜக எம் பிtwitter
Published on

சேவா பக்வாடா திட்டத்தின் கீழ், மத்திய பிரதேசத்தில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றில் இருக்கும் கழிவறையை வெறும் கைகளால் சுத்தம் செய்துள்ளார் பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா. 

ரேவா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்தன் மிஸ்ரா. இவர் தன் கைகளை பயன்படுத்தி, பெண்கள் பள்ளியில் இருக்கும் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது

கழிவறையை கைகளால் சுத்தம் செய்த பாஜக எம் பி
இரண்டாம் உலகப் போரின் போது கட்டப்பட்ட கழிவறை - 104 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசிக்கும் பெண்

மத்திய பிரதேசத்தில் உள்ள கட்கரி கிராமத்தில் இருக்கிறது அந்த பள்ளி. 

கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்கள் எதையும் உபயோகிக்காமல் வெறும் கைகளால் இவர் கழிவறையை சுத்தம் செய்கிறார்.

இந்த வீடியோவை தன் டிவிட்டர் பக்கத்தில் , "பாஜகவின் சேவா பக்வாடா திட்டத்தின் கீழ், யுவ மோர்ச்சா சார்பில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளியின் கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டன." என்று பதிவிட்டிருந்தார் எம் பி. 

இந்த பதிவில் பிரதமர் நரேந்திர மோடி,பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் டேக் செய்யப்பட்டிருந்தார் எம்பி ஜனார்தன் மிஸ்ரா. 

அந்த பள்ளிக்கு யுவ மோர்ச்சா சார்பாக மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு சென்றிருந்த எம்பி.  கழிவறை சுத்தமாக இல்லாததால் அதை பயன்படுத்த முடியவில்லை என்று அங்குள்ளவர்கள் கூறியதையடுத்து, அவரே சென்று சுத்தம் செய்துள்ளார். 

இவர் தனது கைகளை பயன்படுத்தி கழிவறையை சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் 2018ல் ஆரம்ப பள்ளி ஒன்றில் இவர் கழிவறையை சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது

கழிவறையை கைகளால் சுத்தம் செய்த பாஜக எம் பி
"நாங்கள் வெளியிட்டது Paid News இல்லை" - பாஜக குற்றச்சாட்டை மறுத்த நியூயார்க் டைம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com