டெல்லி குறித்து முதலைக் கண்ணீர் விடும் பாஜக – திரிணாமூல் எம்பி மொய்த்ரா விளாசல்

தில்லியின் மூன்று மாநகராட்சிகளை மீண்டும் இணைக்கும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு அமித்ஷா முன்மொழிந்தார். ஆனால் மொய்த்ரா இதை கண்டித்து பேசும் போது அவர் அவையில் இல்லை.
Mahua Moitra
Mahua MoitraNewsSense
Published on

நாடாளுமன்ற மக்களவையில் தில்லி முனிசபல் கார்ப்பரேஷன் திருத்த மசோதாவை கடந்த புதன்கிழமை பாஜக அரசு முன்வைத்தது. அப்போது பேசிய திரிணாமூல் எம்பி மஹுவா மொய்த்ரா, தில்லிக்கு மாநில அந்தஸ்து கோரி கடந்த பத்தாண்டுகளாக பாஜக முதலைக் கண்ணீர் வடித்ததாக குற்றம் சாட்டினார். மேலும் தேசியத் தலைநகரின் மக்களிடமிருந்து சுயாட்சியின் கடைசி சின்னங்களை இந்த மோசோதா பறித்துவிடும் என்று கடுமையாக தாக்கி பேசினார்.

மக்களவையில் இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய மொய்த்ரா, 1996 முதல் 2014 வரை பல்வேறு மன்றங்களில் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி பாஜக பேசிய பேச்சுக்களை காலவாரியாக ஆதாரத்துடன் பட்டியலிட்டார். டெல்லிக்கு மாநில அந்தஸ்டு இல்லை என்று கண்ணீர் விட்டு அழுத ஒன்றிய அரசின் நாடகத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.

Mahua Moitra
மஹூவா மொய்த்ரா : “பாதுகாப்பற்றதாக பயத்துடன் பாஜக இருக்கிறது” - கர்ஜித்த திரிணாமூல் எம்.பி

மேலும் இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் இடமில்லை என்றும் அது டெல்லி சட்டசபையில் கொண்டு வரப்படவேண்டும் என்றும் கூறினார். நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள பாஜக முதலில் டெல்லியில் தேர்தலை நடத்தட்டும். முனிசிபல் தேர்தலில் வெற்றி பெற்று மாநில சட்டசபையில் இந்த மசோதாவைக் கொண்டு வர யார் தடுத்தது? இப்படி பின்கதவு வழியாக மசோதாவை கொண்டு வராதீர்கள் என்று முழங்கினார்.

தில்லியின் மூன்று மாநகராட்சிகளை மீண்டும் இணைக்கும் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு அமித்ஷா முன்மொழிந்தார். ஆனால் மொய்த்ரா இதை கண்டித்து பேசும் போது அவர் அவையில் இல்லை. இப்படி மூன்றையும் இணைப்பதற்காக்க டில்லி முனிசபல் கார்ப்பரேசனை துண்டித்ததாகவும், இதனால் உள்ளூர் குடிமை அமைப்புகளிடையே வருமான ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருப்பதாகவும் மொய்த்ரா கூறினார்.

இந்த மசோதா அரசாங்கத்தின் கூட்டுறவுக் கூட்டாட்சியை புறக்கணிக்கும் செயல் என்றும் அவர் கூறினார். இந்த மசோதாவில் நேஷனல் கேப்பிட்டல் டெரிட்டரி அரசாங்கம் என்று பொருள்படும் வார்த்தைக்கு பதிலாக மத்திய அரசு என்ற வார்த்தை மசோதாவின் பல இடங்களில் வருகிறது. இது கூட்டாட்சிக்கு எதிரான பொறுப்பற்ற தன்மையாக வெளிப்படுகிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

டெல்லியில் உள்ள மாநகராட்சித் தேர்தலை நடத்துவதில் மத்திய அரசு தாமதம் செய்ததின் பின்னணியில் இந்த திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட நேரம் ஒரு முரண்பாடான கதையைச் சொல்வதாக அவர் கூறினார். இதுவரை டெல்லி அரசிடமிருந்த அதிகாரத்தை அபகரிக்க ஒன்றிய அரசு முயல்கிறது. மேலும் அந்த அதிகாரத்தை தனக்காக எடுத்துக் கொள்ள முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Mahua Moitra
வேடர்கள்: இலங்கையின் கடைசி பழங்குடி மக்களின் அவல வாழ்க்கை

உருது கவிஞர் மிர்சா காலிப்பின் வரிகளான "அரியணையில் அமரும் போது அனைவரும் தங்களைக் கடவுள் என்று நினைக்கிறார்கள்" என்பதை மேற்கோள் காட்டி பேசினார் மொய்த்ரா. ஆனால் ஆளும் கட்சி பாழும் கிணற்றில் விழுவதையும் அதற்கு மாற்றாக சரியானதை செய்யுமாறும் அவர் வலியுறுத்தினார். உள்துறை அமைச்சர் தனது எல்லையைத் தாண்ட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட மொய்த்ரா இந்த மசோதாவை மாநில சட்டசபைக்கு அனுப்பவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மொய்த்ரா இப்படி பாஜகவை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி பேசியது தில்லி அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com