பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் : பெயர்கள் எப்படி வந்தது? சுவாரஸ்ய பின்னணி தெரியுமா?

சினிமாக்களை வகைப்படுத்தும் போது வூட் என்ற சொல் திரைப்படத்துறையில் ஏன் சேர்க்கப்பட்டது, இந்தியாவில் அது எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து வாருங்கள் தெரிந்துகொள்வோம்.
Bollywood, Hollywood, Kollywood : how the word 'Wood' was added to the name of the film industry
Bollywood, Hollywood, Kollywood : how the word 'Wood' was added to the name of the film industryTwitter
Published on

மனித வாழ்க்கையில் மிகப் பெரிய பொழுதுபோக்கு அம்சம் எதுவென்றால் அது சினிமாதான்.

அவ்வாறு சினிமா நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி வருகிறது. எப்போதும் சினிமா மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

சினிமாக்களை குறிப்பிடும் போது கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட்' என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்படுகிறது.

சினிமாக்களை வகைப்படுத்தும் போது வூட் என்ற சொல் திரைப்படத்துறையில் ஏன் சேர்க்கப்பட்டது, இந்தியாவில் அது எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

அதற்கு முன்னர் அமெரிக்க சினிமாவினை குறிப்பிடும் போது ஹாலிவுட் என்ற வார்த்தை எவ்வாறு பயன்பாட்டுக்கு வந்தது என்பதை தெரிந்து கொள்ளுதல் அவசியமாக உள்ளது.

ஹாலிவுட் என்பது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடத்தில் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும், பல திரைக்கூடங்கள் (studio) அமைந்துள்ளதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை பொதுவாக ஹாலிவுட் என்றழைக்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட் தொழிலதிபர் HJ விட்லி (HJ Whitley) ஹாலிவுட்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். ஹாலிவுட் என்ற பெயரை அமெரிக்கத் திரைப்படத் துறைக்கு வைத்தவர் இவர்தான் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதியில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அப்போது உலகம் முழுவதும் பிரபலமானதால் உலகம் முழுவதும் உள்ள சில சினிமா துறையினர் வுட் என்ற வார்த்தையினை சேர்த்துக்கொண்டனர்.

இந்தியா சினிமாவில் வுட் கலாச்சரம்

இந்திய சினிமாவை பற்றி கூற வேண்டுமென்றால் முதல் சினிமா 1913 ஆம் ஆண்டு ராஜா ஹரிச்சந்திரா படம் வெளியானது. ஆனால் இது முழு நீள ஊமைபடமாகும். அதே சமயம் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1960ஆம் ஆண்டு முதல் இந்திய திரை சரித்திர ஆய்வாளர்களால், இது இந்தி திரைப்படத்தின் பொற்காலம் என்று கூறப்படுகின்றது.

குறிப்பாக ஹிந்தி திரைப்படங்கள் பாலிவுட் என பெயர் வர பெங்கால் திரைத்துறைத்தான் காரணம் எனக் கூறப்பட்டாலும் 1950 க்கு பிறகு ஹிந்தி திரையுலகம் அசுர வளர்ச்சியடைந்திருக்கிறது.

எனவே ஹாலிவுட் போல ஹிந்தி திரைப்படங்கள் அதிகமாக மும்பையில் தயாரிக்கப்பட்டதால் (மும்பையின் பழைய பெயர் பாம்பே) என்ற வார்த்தையின் முதல் எழுத்தை வைத்து பாலிவுட் என்ற வார்த்தை ஹிந்தி சினிமாவுக்கு வந்தது.

Bollywood, Hollywood, Kollywood : how the word 'Wood' was added to the name of the film industry
பாலிவுட் சினிமா 2022 : நிச்சயம் பார்க்க வேண்டிய 10 படங்கள் - Top 10 Hindi Movies in 2022

அதேபோல தமிழ் சினிமாவுக்கு கோலிவுட் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்சினிமானிவின் முக்கிய பகுதியாக கோடம்பாக்கம் உள்ளது, ஆகவே அதன் முதன் எழுத்தான ‘‘கோ’’ வை சேர்த்து தமிழ்சினிமாவிற்கு கோலிவுட் என வகைபடுத்தப்பட்டது.

சினிமாவும் அதனை வகைப்படுத்தும் துறையினையும் தற்போது காணலாம்

மாலிவுட்: மலையாளத் திரைப்படத் துறை

கோலிவுட்: தமிழ் திரைத்துறை

சாண்டல்வுட்: கன்னடத் திரைப்படத் துறை

லாலிவுட்: உருது மற்றும் பஞ்சாபி திரைப்படத் துறை மற்றும் பாகிஸ்தான் திரைப்படத் துறை

தாலிவுட்: டாக்காவின் பங்களாதேஷ் திரைப்படத் துறை

கேரிவுட்: கராச்சி திரைப்படத்துறை

சோலிவுட்: சத்தீஸ்கர் திரைப்படத் துறை

ஆக உலக சினிமாவிலும் இந்திய சினிமாவிலும் வுட் என்ற வார்த்தை பயன்படுத்த காரணம் ஹாலிவுட் என்ற வார்த்தைதான் காரணமாக இருந்திருக்கிறது.

Bollywood, Hollywood, Kollywood : how the word 'Wood' was added to the name of the film industry
மலையாள சினிமா 2022 : நிச்சயம் பார்க்க வேண்டிய 40 படங்கள் - Top 40 Malayalam Movies in 2022

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com