ஹூண்டாய்1967-ல் தென் கொரியாவில் தொடங்கி உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகும். இந்தியாவில் மாருதிக்கு அடுத்தபடியாக 2 இடத்தில் உள்ளது ஹூண்டாய் நிறுவனம். தற்போது காஷ்மீர் பிரிவினையை ஊக்குவிக்கும் விதமாக ஹூண்டாய் அதன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டதாகச் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் இந்தியர்கள் ஹூண்டாய் நிறுவனத்தை புறக்கணிக்கும் விதம் #BoycottHyundai ஹேஷ்டேகை ட்விட் செய்து வருகின்றனர்.
முன்னதாக @hyundaiPakistanOfficial என்ற ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதியப்பட்டிருந்தது. அதாவது இந்திய எல்லையில் இருக்கும் காஷ்மீர் பகுதிக்கு விடுதலை வேண்டும் எனப் பாகிஸ்தான் பிராத்திப்பதாக அந்த ட்விட் இருந்தது. இந்த பதிவு ஹூண்டாயின் பாகிஸ்தான் டீலர்ஷிப் வழியாகப் பதியப்பட்டிருந்தது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட இந்த பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட ஹூண்டாய் நிறுவன கார்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டுமெனக் கோரி #BoycottHyundai என்ற ஹேஷ்டேக் சர்வதேச அளவில் ட்ரெண்டாகி தற்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் எனக் கண்டனக் குரல்கள் வலுத்த நிலையில், தற்போது அந்நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் மன்னிப்பு கோர வேண்டும் என கண்டனக் குரல்கள் வலுத்த நிலையில், தற்போது அந்நிறுவனம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியச் சந்தைக்கு உண்மையாக இருக்கிறது. இந்தியத் தேசியவாத கொள்கையை மதிப்பில் நாங்கள் இதுவரை உறுதியுடன் இருக்கிறோம். ஹூண்டாய் பிராண்டுக்கு இந்தியா இரண்டாவது வீடு என்றே சொல்வோம். உணர்வற்ற சில கருத்து எங்கள் பெயரில் பகிரப்பட்டிருக்கலாம். ஆனால் நாங்கள் எப்போதும் இதுபோன்ற விஷயங்களில் துணியும் சகிப்புத்தன்மை காட்ட மாட்டோம். @hyundaiPakistanOfficial வெளியான கருத்தினை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
எங்களின் கொள்கைக்கு ஏற்ப நாங்கள் இந்தியாவின் இந்திய மக்களின் வளர்ச்சியில் உறுதுணையாக இருப்போம். என ஹூண்டாய் விளக்கமளித்துள்ளது. இந்தியாவில் 2028க்குள் எலக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டுவரும் முனைப்பில் கடந்த டிசம்பர் 2021ல், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவில் ரூ.4000 கோடி முதலீடு செய்யும் திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.