தெலங்கானா: ”வரதட்சணை போதவில்லை” திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணால் ட்விஸ்ட்

போதிய வரதட்சணை அளிக்காததால் திருமணங்கள் நின்றுபோன சம்பவங்களும் கூட உண்டு. இங்கும் அப்படித் தான் நடந்திருக்கிறது, ஆனால் ஒரு ட்விஸ்ட். வரதட்சணை போதவில்லை என்றதும், திருமணத்தை நிறுத்தியதும் மணப்பெண் ஒருவர்.
திருமணம்
திருமணம்Twitter

மாப்பிள்ளை வீட்டார் தனக்கு போதிய வரதட்சணை அளிக்கவில்லை எனக் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார் தெலங்கானாவை சேர்ந்த மணப்பெண் ஒருவர்.

பொதுவாக வரதட்சணை என்பது பெண் வீட்டார் மாபிள்ளை வீட்டாருக்கு வழங்குவர். இந்த முறை பெண்களை ஒடுக்கும் விதமான ஒன்று. வரதட்சணை அளிப்பதையும், வாங்குவதையும் தடுக்க சட்டங்கள் கூட உள்ளன.

போதிய வரதட்சணை அளிக்காததால் திருமணங்கள் நின்றுபோன சம்பவங்களும் கூட உண்டு. இங்கும் அப்படித் தான் நடந்திருக்கிறது, ஆனால் ஒரு ட்விஸ்ட்.

வரதட்சணை போதவில்லை என்றதும், திருமணத்தை நிறுத்தியதும் மணப்பெண் ஒருவர்.

Wedding
Wedding Pexels

தெலங்கானா மாநிலம் மேட்சல் மல்காஜ்கிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு மார்ச் 9 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இரு வீட்டாரும் கலந்து பேசி, ரூ.2 லட்சம் மணப்பெண்ணுக்கு வரதட்சணையாக அளிக்க முடிவு செய்யப்பட்டது. திருமணத்தன்று, வெகு நேரம் முன்னதாகவே மாப்பிள்ளையும் அவரது குடும்பத்தினரும் மண்டபத்திற்கு வந்து காத்திருந்தனர்.

முகுர்த்த நேரம் முடிந்தும் மணப்பெண் வரவில்லை. இதனால் பெண்ணை தேடி அவர்கள் சென்றபோது தான் இந்த திருமணம் நடைபெறாது என்று பெண்ணின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

திருமணம்
காதலனுடனான திருமணத்தை நிறுத்திய 24 வயது பெண்; 54 வயது முதியவரை மணந்த சம்பவம் - எங்கே?
Wedding
WeddingTwitter

மாப்பிள்ளை வீட்டார் அளித்த வரதட்சணை தனக்கு போதவில்லை எனக் கூறி கல்யாணத்தை நிறுத்தியுள்ளார். இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் தருவதாக இருந்தால் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறேன் என அப்பெண் தெரிவித்திருக்கிறார்

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு, மாப்பிள்ளை வீட்டார் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர். அந்த பெண் கேட்ட பணத்தை தங்களால் தர இயலாது என மணமகன் வீட்டார் தெரிவிக்கவே இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதனம் செய்தனர். எனினும் திருமணம் நடைபெறவில்லை.

திருமணம்
”மாப்பிள்ளை கருப்பாக இருக்கிறார்” - கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com