”மாப்பிள்ளை கருப்பாக இருக்கிறார்” - கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் - எங்கே?

மணமகளையும் உறவினர்கள் மணப்பந்தலுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். மணமேடையில், மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்ய முடியாது என கூறி மேடையை விட்டு உடனடியாக இறங்கியதாக கூறப்படுகிறது.
marriage
marriage Twitter
Published on

மணமகன் கருப்பாக இருக்கிறார் என கூறி கடைசி நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்றின் ஏற்பாடு நடந்துக் கொண்டிருந்தது.

இரு குடும்பத்தார்களும் திருமணத்திற்கான வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டு இருந்தனர்.

Marriage
Marriage NewsSense

திருமணத்தின் முந்தைய சடங்கான மாலை மாற்றி கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, மணமகன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

இதன்பின்பு அழைத்து வரப்பட்ட மணமகன், மணமேடையில் வந்து அமர்ந்து உள்ளார்.

இந்த நிலையில், மணமகளையும் உறவினர்கள் மணப்பந்தலுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். மணமேடையில், மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்ய முடியாது என கூறி மேடையை விட்டு உடனடியாக இறங்கியதாக கூறப்படுகிறது.

marriage
மன அழுத்தம் டு காதல் திருமணம்; காப்பகத்தில் மலர்ந்த காதல் - ஒரு நெகிழ்ச்சி கதை!
Marriage (Rep)
Marriage (Rep)Pexels

அதுவரை, மணமகனை அந்த பெண் பார்க்கவில்லை என தெரிகிறது. இதனால், திருமண நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

உறவினர்கள் காரணம் கேட்க, தனக்கு கருப்பு நிறத்தில் உள்ள மணமகன் வேண்டாம் என மணப்பெண் கூறியுள்ளார். இதனால், மணமகள் இல்லாமல் மணமகனின் உறவினர்கள் தனியாக திரும்பியுள்ளனர்.

இதன்பின்னர், மணமகளை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், மணமகள் தனது முடிவை மாற்றிக்கொள்ள வில்லை

கடைசி நேரத்தில் மணமகள் எடுத்த முடிவால் திருமணம் நின்று போனது, அந்த பகுதியில் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

marriage
" Two Two Two" : இரட்டை சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட நபர் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com