சந்திரயான் 3: “பணத்தை திருப்பி கொடுங்கள்” பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கேள்வியால் சர்ச்சை!

இந்தியாவில் நிலவி வரும் வறுமை, பட்டினி போன்ற பிரச்னைகளை கவனிக்காமல், விண்வெளி ஆராய்ச்சிக்கு இவ்வளவு செலவு செய்யும் நாட்டுக்கு எதற்காக உதவித் தொகை என்று அந்த வீடியோவில் கேட்டிருந்தார் பேட்ரிக்.
சந்திரயான் 3: “பணத்தை திருப்பி கொடுங்கள்” பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கேள்வியால் சர்ச்சை!
சந்திரயான் 3: “பணத்தை திருப்பி கொடுங்கள்” பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கேள்வியால் சர்ச்சை!twitter
Published on

சந்திரயான் 3 மிஷன் வெற்றியடைந்ததை அடுத்து, நாங்கள் கொடுத்த 24 கோடி ரூபாய் உதவித் தொகையை திருப்பி தாருங்கள் என்று இந்தியாவிடம் கேட்டுள்ளார் பிரிட்டன் பத்திரிகையாளர் ஒருவர். இந்த வீடியோ இணையத்தில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தியா சந்திரயான் 3 திட்டத்தை மேற்கொண்டது. நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கி, இந்த சாதனையை செய்த முதல் நாடு என்ற வரலாற்று சிறப்பை பேற்றது இந்தியா.

இந்த திட்டத்திற்காக சுமார் 615 கோடி ரூபாய் இந்தியா செலவழித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனையடுத்து பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒருவர் இந்தியாவின் இந்த சாதனையை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வெளியான வீடியோவில் இந்தியாவின் இந்த சாதனையை பாராட்டினார் பத்திரிகையாளர் பேட்ரிக் கிறிஸ்டிஸ். தொடர்ந்து பேசியவர், “தற்போது, 2016 மற்றும் 2021 க்கு இடையில் நாங்கள் அனுப்பிய ரூ. 24,081.09 கோடி உதவித் தொகையை இந்தியா திருப்பித் தரவேண்டும். அடுத்த ஆண்டு ரூ. 597.03 கோடியை வழங்க உள்ளோம்.

ஆனால் அதனை நிலுவையில் வைக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். விதிப்படி விண்வெளித் திட்டத்தைக் கொண்ட நாடுகளுக்கு நாம் பணம் கொடுக்கக் கூடாது." என்று இவர் பேசியுள்ளார்

சந்திரயான் 3: “பணத்தை திருப்பி கொடுங்கள்” பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கேள்வியால் சர்ச்சை!
Chandrayaan 3 மிஷனை கேலி செய்து பிரகாஷ் ராஜ் பகிர்ந்த ட்வீட் - நடிகர் மீது வழக்கு பதிவு

இந்தியாவில் நிலவி வரும் வறுமை, பட்டினி போன்ற பிரச்சினைகளை கவனிக்காமல், விண்வெளி ஆராய்ச்சிக்கு இவ்வளவு செலவு செய்யும் நாட்டுக்கு எதற்காக உதவித் தொகை என்று அந்த வீடியோவில் கேட்டிருந்தார் பேட்ரிக்.

இந்த வீடியோ ட்விட்டரில் பரவி, இந்தியர்கள் கொந்தளித்து வருகின்றனர். பலரும் அந்த பத்திரிகையாளரை கடிந்துகொண்டு அவரது வீடியோவிற்கு ரிப்ளை செய்து வருகின்றனர்.

பிபிசி செய்தியாளர் ஒருவரும், இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார். இதன் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் இரு தினங்களுக்கு முன் பரவியது. இந்திய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அந்த செய்தியாளருக்கு பதிலடி கொடுத்திருந்தார்

சந்திரயான் 3: “பணத்தை திருப்பி கொடுங்கள்” பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கேள்வியால் சர்ச்சை!
Chandrayaan 3: சரித்திரம் படைத்த இந்தியா - நிலவில் கால் பதித்தது விக்ரம் லேண்டர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com