2023 - 2024 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இந்திய ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு பொருட்களின் சுங்கவரி உட்பட சில வரிகளை மாற்றி இருக்கிறார்.
இதன் விளைவாக சில பொருட்களின் விலை அதிகரிக்கலாம், சிலவற்றின் விலை குறையலாம்.
இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் 87 நிமிடங்கள் நடைப்பெற்றது. இதுவே இந்த 5 வருடங்களில் நிதியமைச்சரின் மிகச் சிறிய பட்ஜெட் தாக்கலாகும்.
எந்த பொருட்களின் விலை குறையலாம்?
மொபைல் போன்களின் உற்பத்திக்குத் தேவையான சில பாகங்கள் மீதான வரி குறைக்கப்பட்டிருக்கிறது. இது மொபைல் ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட் ஃபோன்களின் விலையில் எதிரொலிக்கலாம்.
டிவி பேனல்களில் பயன்படுத்தப்படும் ஓபன் செல்களின் சில பாகங்கள் மீதான சுங்கவரி 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதுவும் இனி தொலைக்காட்சிப் பெட்டி வாங்குபவர்கள் கொடுக்கும் விலையில் எதிரொலிக்கலாம்.
இறால்களுக்கு தேவையான உணவுகள் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்தியாவில் இறால் வளர்ப்பு அதிகரிக்கும், வெளிநாடுகளுக்கு இறால் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு நமக்கும் குறைந்த விலையில் நல்ல தரமான இறால் கிடைக்கலாம்.
செயற்கை முறையில் ஆய்வகங்களில் வைரங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படி ஆய்வகத்தில் வைரங்கள் தயாரிக்கப்படுவதற்கு தேவையான விதைகள் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் செயற்கை வைரங்களின் விலை குறையலாம்.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிகரெட்டுகள் மீதான வரி 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. புகை பிடிப்பவர்கள் இனி ஒவ்வொரு சிகரெட்டுக்கும் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
தங்கக் கட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இனி தங்க பாத்திர பண்டங்கள் சாமான்களை வாங்கும் போது விலை எகிறும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இன்று சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் சாதாரண வீடுகளில் கூட எலக்ட்ரானிக் சிம்னிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிம்னிகள் மீதான சுங்கவரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இனி வீட்டில் எலெக்ட்ரானிக் சிம்னி வைக்கும் போது இந்த சுங்கவரி ஏற்றத்தையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
முழுமையாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள் மற்றும் எலக்ட்ரானிக் வாகனங்கள் மீதான சுங்கவரி 60 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு வேளை நீங்கள் வெளிநாட்டு சொகுசு கார்கள் மற்றும் எலக்ட்ரானிக் வாகனங்களை வாங்குவதாக இருந்தால் இந்த 10% வரி உயர்வையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust