Bulbul Bird Facts : புல்புல் பறவை குறித்த 10 சுவாரஸ்யமான தகவல்கள்

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகிறது புல்புல் பறவைகள். பொதுவாக இப்பறவைகள் நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள வனத்தில் அல்லது புதர் மண்டிக் கிடக்கும் இடங்களில் தான் வாழும்
Bulbul Bird
Bulbul BirdTwitter
Published on

புல்புல் என்கிற பறவை இனத்தில் கிட்டத்தட்ட 130 வகையான பறவைகள் இருக்கின்றன. 24 பெரும் பிரிவுகளாக இப்பறவை இனம் பிரிக்கப்பட்டுள்ளது.

23 - 60 கிராம் எடையும், 3.6 - 4.2 இன்ச் நீளம் வளரக்கூடிய இப்பறவை, புழு பூச்சிகளை மட்டுமே உண்டு உயிர் வாழக்கூடியது.

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகிறது புல்புல் பறவைகள். பொதுவாக இப்பறவைகள் நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள வனத்தில் அல்லது புதர் மண்டிக் கிடக்கும் இடங்களில் தான் வாழும் என்கிறது கிடட்ல் (Kidadl) என்கிற வலைத்தளம்.

ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் புல்புல் பறவைகள் பொதுவாக மழைக் காடுகளிலும், ஆசியாவில் வாழும் புல்புல் பறவைகள் திறந்த வெளியிலும் வாழ்கின்றன.

புல்புல் பறவைகள் பத்தினி விரதம் இருக்கும் விலங்கினங்களில் ஒன்று. ஒரே இணை உடன் தான் தன்னுடைய பெரும்பாலான வாழ்நாளைக் கழிக்கும். ஆண் புல்புல் பெண் பறவையை வசீகரிக்கப் பாடல்களை எல்லாம் பாடும். பறவைகளுக்கு இடையில் இனப்பெருக்கம் நடந்து முடிந்துவிட்டால், முட்டை இடுவது முதல் அதை அடைகாப்பது வரை அதிகப்படியான வேலைகளைப் பெண் புல்புல் பறவைகளே மேற்கொள்ளும்.

இப்போது வரை புல்புல் பறவைகள் அழிவின் விளிம்பில் இல்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம். அதன் எண்ணிக்கையும் தொடர்ந்து சீராகவே இருந்து வருகிறது என சில செய்திகளில் பார்க்க முடிகிறது.

இந்த புல்புல் பறவைகள் சுமார் 11 ஆண்டுகள் வரை வாழக் கூடியவை என கிடட்ல் தளத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.

புல்புல் பறவைகளில் ரெட் வெண்டட் புல்புல் போன்ற சில இனங்கள் மற்ற புல்புல் இனங்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. ஆனால் இப்பறவை இனத்தால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

Bulbul Bird
'சாவர்கர் பறவைகள் மீதேறி வந்தார்' - கர்நாடக பள்ளி பாடத்தால் சர்ச்சை

மனிதர்களோடு நெருங்கிப் பழகக் கூடிய பறவை இனங்களில் புல்புல்லும் ஒன்று. புல்புல் பறவைகள் பார்ப்பதற்குப் பல வண்ணங்களோடு அத்தனை அழகாக இருக்காது, அதே நேரத்தில் பார்ப்பதற்குப் பயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவோ, சற்றே அறுவறுப்பை வரவழைக்கும் விதத்திலோ இருக்காது.

Bulbul Bird
Myths : நாம் இன்று வரை நம்பிக் கொண்டிருக்கும் 10 கட்டுக்கதைகள் - Interesting Facts

தன்னுடைய வாழ்விடத்தை விட்டு வேறு இடங்களுக்குக் குடியேறும் தன்மை கொண்டது புல்புல் பறவைகள். அப்படி வேறு இடங்களுக்குச் செல்லும் போது கூட்டமாகப் பறக்கும் வழக்கம் உடையது புல்புல்.

Bulbul Bird
5000 ஆண்டுகள் பழைமையான உலகின் மூத்த மரம் - ஆச்சரிய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com