'சாவர்கர் பறவைகள் மீதேறி வந்தார்' - கர்நாடக பள்ளி பாடத்தால் சர்ச்சை

சாவர்கர் இந்துத்துவவாதிகளின் அடையாளமாக முன்வைக்கப்பட்டு வருகிறார். தற்போது இவரை பற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சாவர்கர்
சாவர்கர்Twitter

விநாயக தாமோதர் சாவர்க்கர் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் எனக் கூறப்படுகிறார். ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தை (RSS) உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர்.

தற்போது நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் பாஜகவுக்கு பக்கபலமாக இருப்பது இந்த அமைப்பு தான் என்பது அனைவரும் அறிந்ததே.

சாவர்கர் இந்துத்துவவாதிகளின் அடையாளமாக முன்வைக்கப்பட்டு வருகிறார். தற்போது இவரை பற்றி புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

சாவர்கர் வெள்ளையர்களால் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அந்த நேரத்தில் அவர் பறவைகளின் சிறகில் அமர்ந்து இந்தியாவுக்கு வந்து சென்றதாக கர்நாட பள்ளி பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோஹித் சக்ரதீர்த்தா என்பவர் தலைமையில் பாஜக அரசு தயாரித்துள்ள 8ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் 'காலத்தை வென்றவர்கள்' என்ற தலைப்பில் இடம் பெற்ற பகுதியில் தான் இந்த கதை இடம் பெற்றிருக்கிறது.

"அந்தமான் சிறையில் ஈ, எறும்புகள் கூட நுழைய துவாரம் இல்லாத இடத்தில் அடைக்கப்பட்டு இருந்த சாவர்க்கர் தினந்தோறும் பறவை மீது அமர்ந்து அறையில் இருந்து வெளியேறி இந்திய நிலப்பகுதிக்கு வந்து சென்றார்" என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாஜக பல வழிமுறைகளை பின்பற்றி சாவர்கர் போன்ற தலைவர்களை மக்களிடத்தில் சேர்க்க பல ஆண்டுகளாக முயன்று வருகிறது. வட மாநிலங்களில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது எனலாம்.

அதன் ஒரு பகுதியாகவே இந்த பாடத்திட்டமும் பார்க்கப்படுகிறது.

சாவர்கர்
சத்யபால் மாலிக் : நரேந்திர மோடி உடன் மோதும் ஆளுநர் - யார் இவர்?

பாஜகவின் இந்த பிரச்சாரத்துக்கு எதிராக, சாவர்கருக்கு 50 ஆண்டுகள் வழங்கப்பட்ட தண்டனையை வெள்ளையர்கள் 14 ஆண்டுகளாக குறைப்பதற்காக சாவர்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தார் என்ற கருத்தினை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் இடதுசாரிகள்.

அறிவியல் பூர்வமாக சாத்தியமில்லாத கதை பாடத்திட்டத்தில் இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடக பாடத்திட்டத்தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் கேள்விகளை எழுப்புகின்றன. மன்னர் திப்புசுல்தான் பற்றிய பாடங்கள் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாவர்கர்
Karnataka : பள்ளிகளில் திப்பு சுல்தான் பாடங்களை குறைக்க பாஜக அரசு முடிவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com