ஸ்விக்கி: புர்கா, தோளில் ஸ்விக்கி பை; இணையத்தை குழப்பிய பெண்ணின் புகைப்படம்- பின்னணி என்ன?

அந்த பெண் யார், இந்த புகைப்படத்தின் பின்னணி என்னவென்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது
புர்கா, தோளில் ஸ்விக்கி பை: இணையத்தை குழப்பிய பெண்ணின் புகைப்படம் - யார் இவர்?
புர்கா, தோளில் ஸ்விக்கி பை: இணையத்தை குழப்பிய பெண்ணின் புகைப்படம் - யார் இவர்?ட்விட்டர்
Published on

சமீபத்தில் புர்கா அணிந்துகொண்டு, தோளில் ஸ்விக்கி பேக் அணிந்து சாலையில் நடந்துசெல்லும் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் பரபரப்பை கிளப்பியது.

இந்த பெண் யார்? ஏன் இவர் ஸ்விக்கி பையை அணிந்திருக்கிறார்? ஸ்விக்கி டெலிவரி ஏஜன்ட்டா? போன்ற கேள்விகளை இணையவாசிகள் எழுப்பிவந்தனர்

இந்நிலையில், அந்த பெண் யார், இந்த புகைப்படத்தின் பின்னணி என்னவென்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது

லக்நோவை சேர்ந்த ரிஸ்வானா எனும் இவர் கணவனால் கைவிடப்பட்ட, தனது குடும்பத்தை காப்பாற்ற போராடி வரும் ஒரு பெண்.

தி மூக்நாயக் என்ற பத்திரிகைக்கு ரிஸ்வானா அளித்த பேட்டியில் அவர் தனது கதையை பகிர்ந்திருந்தார்

ரிஸ்வானாவுக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது. ரிஸ்வானாவின் கணவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். மூன்று ஆண்டுகளுக்கு முன் கணவரின் ஆட்டோ களவாடப்பட்டது

ரிஸ்வானாவின் கணவர் மட்டுமே குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே ஆள். ஆட்டோ திருடப்பட்டதால், வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை, குழந்தைகளுக்கும், மனைவிக்கும் ஒரு வேளையேனும் உணவளிக்க வேண்டும் என்ற நிலை.

வேறு வழியின்றி, தெருக்களில் பிச்சை எடுக்க தொடங்கினார் அவர்.

புர்கா, தோளில் ஸ்விக்கி பை: இணையத்தை குழப்பிய பெண்ணின் புகைப்படம் - யார் இவர்?
Manipur : பெண்களால் இயக்கப்படும் 500 வருட பழைய சந்தை - பாரம்பரியத்தின் பின்னணி என்ன?

ஆனால், குடும்பச்சுமை, இயலாமை, பணமில்லாதது, பசி, பட்டினி அவரை நாலாப்பக்கம் இருந்தும் தாக்கியது. மனம் தளர்ந்த ரிஸ்வானாவின் கணவர் ஒரு நாள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், மனைவி குழந்தைகளை விட்டு சென்றுவிட்டார்.

உடைந்து உட்கார நேரமில்லை, மூன்று குழந்தைகளை கரை சேர்க்கவேண்டும். பொறுப்பை கையில் எடுத்தார் ரிஸ்வானா. நாள் முழுவதும் வேலைபார்க்கிறார் இவர். கூலித் தொழிலாளியாகவும், டீ கடைகளுக்கு டிஸ்போஸிபிள் கப்கள், டம்பளர்கள் ஆகியவற்றையும் சப்ளை செய்கிறார்.

புர்கா, தோளில் ஸ்விக்கி பை: இணையத்தை குழப்பிய பெண்ணின் புகைப்படம் - யார் இவர்?
முதல் மாத சம்பளத்தில் அண்ணன் கொடுத்த சர்பிரைஸ்; நெகிழ்ந்த தம்பி - மனதை உருக்கும் வீடியோ!

தனது பணி நிமித்தமாக எங்கு செல்லவேண்டும் என்றாலும், ரிஸ்வானா நடந்து தான் செல்கிறார். நடந்து செல்வதால் மிச்சமாகும் பணத்தை குழந்தைகளுக்கு செலவழிப்பேன் என்று ரிஸ்வானா கூறுகையில் மனம் கனக்கிறது.

அவரது குழந்தைகள் பற்றிய நினைவே அவருக்கு உத்வேகமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 20 முத 25 கி மீ வரை நடக்கிறார் ரிஸ்வானா

இவர் ஸ்விக்கியில் வேலைபார்க்கவில்லை.

பின் ஏன் ஸ்விக்கியின் பேகை தோளில் போட்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, தான் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் பொருட்களை தாங்க ஏதுவாக ஒரு பை வேண்டியிருந்தது என்று அவர் தெரிவித்தார். இதனால், பழைய பொருட்கள் கிடைக்கும் தெருவோர கடை ஒன்றில், 50 ரூபாய்க்கு இந்த பையை அவர் வாங்கியுள்ளார்.

ரிஸ்வானாவுக்கு 19, 11, 7 வயதுகளில் இரு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். இவரது மூத்த மகளுக்கு 22 வயது, இரண்டு ஆண்டுகளுக்கு முன் ரிஸ்வானா இவருக்கு திருமணம் செய்து வைத்தார். மற்ற நால்வரும் ஒரு பத்துக்கு பத்து அறையில் தான் தற்போது வரை தங்கியுள்ளனர்.

ரிஸ்வானாவின் கதை பலரை கண்கலங்கச் செய்துள்ளது!

புர்கா, தோளில் ஸ்விக்கி பை: இணையத்தை குழப்பிய பெண்ணின் புகைப்படம் - யார் இவர்?
கனிகா : 32 வயதில் 10 பிரைவேட் ஜெட்களை சொந்தமாக்கிய இந்திய பெண் - ஊர் குருவி பருந்தான கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com