முதல் மாத சம்பளத்தில் அண்ணன் கொடுத்த சர்பிரைஸ்; நெகிழ்ந்த தம்பி - மனதை உருக்கும் வீடியோ!

முதல் மாத சம்பளத்தில் தனது தம்பிக்கு கால்பந்து பூட்ஸை அண்ணன் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்ய, அதற்கு தம்பியின் ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இவர்களின் அன்பு பரிமாற்றத்தை பாராட்டி கமென்ட் செய்து வருகின்றனர்
முதல் மாத சம்பளத்தில் கால்பந்து பூட்ஸ் வாங்கி கொடுத்த அண்ணன்- தம்பியின் ரியாக்சன் வைரல்
முதல் மாத சம்பளத்தில் கால்பந்து பூட்ஸ் வாங்கி கொடுத்த அண்ணன்- தம்பியின் ரியாக்சன் வைரல்Twitter
Published on

இணையத்தில் உலாவும் போது பலவகையான வீடியோக்களை கடந்து செல்கிறோம். சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன, சில கோபப்பட, சில கேள்வி கேட்க வைக்கின்றன.

சில வீடியோக்கள் நம்மை உணர்ச்சிப் பூர்வமாக்கி மனதுக்கு நெருக்கமாகின்றன.

அப்படிப்பட்ட ஒரு வீடியொ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நம் எல்லாருக்குமே நமது முதல் மாத சம்பளம் மிகவும் ஸ்பெஷலான ஒன்று. நம் குடும்பத்தினருக்கு ஸ்பெஷலாக அதனை செலவிட நினைப்போம்.

அப்படி ஒரு அண்ணன் அவரது தம்பிக்கு வாங்கிக்கொடுத்த கிஃப்ட் தான் இந்த வீடியோ!

தூங்கிக்கொண்டிருந்த தம்பியை எழுப்பி அவனுக்காக வாங்கி வந்திருந்த ஸ்னீக்கர்களை அண்ணன் காட்டியதும் அதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவன் உணர்ச்சி வசத்தில் அண்ணனைக் கட்டித் தழுவுகிறான்.

பின்னர் கண்ணீருடன் அவர் வாங்கி வந்திருந்த ஷாக்ஸை போட்டுப்பார்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாக பகிரப்பட்டு வருகிறது. நெருக்கமான உறவுகள் கொடுக்கும் இது போன்ற சர்பிரைஸ்கள் எப்போதும் வாழ்க்கையின் மீதான பிடிப்பை அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

முதல் மாத சம்பளத்தில் கால்பந்து பூட்ஸ் வாங்கி கொடுத்த அண்ணன்- தம்பியின் ரியாக்சன் வைரல்
விமானத்தில் தமிழ் அறிவிப்புகள் - வைரல் விமானி ப்ரியவிக்னேஷின் கதை!

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் உருக்கமான கமன்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

பெரும்பாலானவர்கள் இந்த சகோதரர்களின் பெற்றோர் இவர்களை நன்றாக வளர்த்திருப்பதாக கூறுகின்றனர்.

முதல் மாத சம்பளத்தில் கால்பந்து பூட்ஸ் வாங்கி கொடுத்த அண்ணன்- தம்பியின் ரியாக்சன் வைரல்
”அப்பா அம்மாவுக்கு பணம் கொடுங்கள்” சாண்டா க்ளாஸுக்கு சிறுமி எழுதிய கடிதம் வைரல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com