தோனி Candy Crush விளையாடிய வீடியோ வைரல் - அடுத்த 3 மணி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா?

இண்டிகோ விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தவருக்கு, ஏர் ஹோஸ்டஸ் சாக்லேட்கள் வழங்கினார். அப்போது அவரிடம் தோனி சிரித்து பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், இணையவாசிகளை கவர்ந்தது தோனி மட்டுமல்ல, அவரது டேபில் கேண்டி கிரஷ் விளையாடிக் கொண்டிருப்பது தான்.
தோனி Candy Crush விளையாடிய வீடியோ வைரல் - அடுத்த 3 மணி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா?
தோனி Candy Crush விளையாடிய வீடியோ வைரல் - அடுத்த 3 மணி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா?Twitter

விமான பயணத்தின்போது தல தோனி கேண்டி கிரஷ் விளையாட்டு ஆடி வரும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் சுமார் 30 லட்சம் பேர் தற்போது அந்த கேமை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

வீடியோ கேம்கள் காலத்திற்கு ஏற்ப பல மாற்றங்களை அடைந்துள்ளன. ஆனாலும் ஒரு சில விளையாட்டுகள் இன்னும் நம் மனதில், செல்ஃபோன்களில் நிலைத்திருக்கிறது. அவற்றில் ஒன்று தான் இந்த கேண்டி கிரஷ் விளையாட்டு. அடுக்குகளாக இருக்கும் மீடாய்களில் ஒரே மாதிரியான மிட்டாய்களை இணைத்து விளையாடும் விளையாட்டு இது.

நிறைய வண்ணமயமான மிட்டாய்கள், ஒவ்வொரு லெவலிலும் கடுமையாகும் போட்டி என ஒரு முறை உள்ளே நுழைந்துவிட்டால் அடிமையாக்கிவிடும் இந்த கேம்.

சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த வீடியோ கேமை விரும்பாதவர் இல்லை.

தல தோனியும் விதிவில்லக்கல்ல என்றே சொல்லவேண்டும்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும் கேப்டனுமான தோனி தன் மனைவியுடன் விமானத்தில் பயணிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.

இண்டிகோ விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தவருக்கு, ஏர் ஹோஸ்டஸ் சாக்லேட்கள் வழங்கினார். அப்போது அவரிடம் தோனி சிரித்து பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், இணையவாசிகளை கவர்ந்தது தோனி மட்டுமல்ல, அவரது டேபில் கேண்டி கிரஷ் விளையாடிக் கொண்டிருப்பது தான்.

இந்த வீடியோ இணையத்தில் காட்டுத் தீயாய் பரவ, ட்விட்டரில் கேண்டி கிரஷ் டிரெண்டானது. அதுமட்டுமல்லாமல், கிட்ட தட்ட 3 மணி நேரத்திற்கு உள்ளாகவே சுமார் 3.6 மில்லியன் பேர் அந்த வீடியோ கேமை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனையடுத்து தங்களின் ட்விட்டர் பக்கம் மூலமாக கேண்டி கிரஷ் நிறுவனம் தோனிக்கு நன்றி தெரிவித்திருந்தது.

மிண்ட் தளத்தின் அறிக்கையின் படி, தோனி வீடியோ கேம் பிரியராம். Call of Duty, FIFA, PUBG போன்ற மற்ற கேம்களையும் இவர் விரும்பி விளையாடுவாராம்.

தோனி கடைசியாக ஐபிஎல் 2023ல் விளையாடினார். இந்த பருவத்தில் இவரது தலைமையில் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

தோனி Candy Crush விளையாடிய வீடியோ வைரல் - அடுத்த 3 மணி நேரத்தில் என்ன நடந்தது தெரியுமா?
Dhoni: ISL அணி முதல் தயாரிப்பு நிறுவனம் வரை - எம் எஸ் தோனியின் சொத்துக்கள் என்னென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com