பகவத் கீதை மத நூல் கிடையாது - சர்ச்சை கிளப்பிய கர்நாடகா அமைச்சர் பி.சி. நாகேஷ்

மதம் சார்ந்த சடங்குகள் குறித்தோ, எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது குறித்தோ பகவத் கீதை பேசுவதில்லை. உயர்ந்த நல்லொழுக்கங்களையும், மாண்புகளையுமே அது போதிக்கிறது.
B.C. Nagesh
B.C. NageshTwitter
Published on

பகவத் கீதை ஒரு புனித நூல், அதனைப் பைபிளுடன் ஒப்பிடாதீர்கள் என்று கர்நாடகா கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்ட சம்பவம் தற்போது தணிந்துள்ள நிலையில் பெங்களூர் பள்ளி ஒன்று மாணவர்களை பைபிள் படிப்பதைக் கட்டாயமாக்கியுள்ளதாக புது விவகாரம் கிளப்பியுள்ளது.

பெங்களூருவில் இயங்கி வரும் கிளாரன்ஸ் பள்ளியில் மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்குப் பைபிள் கொண்டு வர வேண்டும் என்றும், மறைக்கல்வி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

clarence high school
clarence high schoolTwitter

இது பேசும் பொருளாக மாறி இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கையிலெடுத்து குரல் கொடுக்க ஆரம்பித்தன.

அதற்குப் பள்ளி நிர்வாகம், "பைபிளை அடிப்படையாகக் கொண்ட கல்வியை தான் நாங்கள் கற்பித்து வருகிறோம்" எனக் கூறியது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க வேண்டுமென கர்நாடகா அரசு சார்பில் கிளாரன்ஸ் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் பி.சி. நாகேஷிடம் செய்தியாளர் ஒருவர், "பள்ளிப் பாடத்தில் பகவத் கீதையை சேர்க்க அரசு பரிசீலித்து வரும்போது, பைபிளை பள்ளிக்கு கொண்டு வரக் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் நாகேஷ், "மதம் சார்ந்த நூல்கள் தான் பள்ளிப் பாடத்தில் இருக்கக் கூடாது. பகவத் கீதை மதம் சார்ந்தது கிடையாது.

B.C. Nagesh
பெங்களூர்: விபசார வழக்கில் ஆண்களை கைது செய்ய கூடாது - கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு

மதம் சார்ந்த சடங்குகள் குறித்தோ, எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது குறித்தோ பகவத் கீதை பேசுவதில்லை. உயர்ந்த நல்லொழுக்கங்களையும், மாண்புகளையுமே அது போதிக்கிறது. அது எல்லாவற்றுக்கும் மேலானது. எனவே பகவத் கீதையுடன் பைபிளை ஒப்பிடாதீர்கள்" என்றார். மாநிலத்தின் கல்வி அமைச்சர் இவ்வாறு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

B.C. Nagesh
ஹிஜாப் விவகாரம்: மாணவியை பாராட்டிய அல்கொய்தா தலைவர்.. பதிலடி கொடுத்த தந்தை

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com