மணிப்பூர்: பழங்குடி பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்லும் கும்பல் - என்ன நடக்கிறது அங்கே?

குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Centre May Act Against Twitter Over Video Of Manipur Women Paraded Naked
Centre May Act Against Twitter Over Video Of Manipur Women Paraded Nakedtwitter
Published on

மணிப்பூரில் குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரு பெண்களை, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்து கண்டன குரல்கள் எழுகின்றன.

மணிப்பூரில் வசிக்கும் மெய்தேய் சமூக மக்கள் தங்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். பெரும்பாலும் இந்துக்களாக இருக்கும் மெய்தேய் சமூகத்தினர் மணிப்பூர் தலைநகர் இம்பால் மற்றும் பல கிராமங்களில் வசிக்கின்றனர்.

பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக இருக்கும் குக்கி இன மக்கள் மலைப்பகுதியில் வசிக்கின்றனர். இந்த மலைப்பகுதிகளிலும் வசிக்க உரிமை கேட்டு வருகின்றனர் மெய்தேய் மக்கள். இதற்கு குக்கி பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இதனால் கடந்த மே மாதம் முதல் போராட்டங்கள், கலவரங்கள் வெடித்து தற்போது வரை நீடிக்கிறது.

இந்த நிலையில் தான் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ தற்போது வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இம்பாலில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் தான் இவ்வாறு குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து ஆடையின்றி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த கொடூர சம்பவம் மே 4 ஆம் தேதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளதாகவும் பழங்குடியின அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், பலரும் இதற்கு கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங், இது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றும் உண்மை குற்றவாளி கண்டறியப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2 பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமை கண்டிக்கத்தக்கது என்றும் முற்றிலும் மனிதாபிமானமற்றது எனவும் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் முற்றிலும் மனம் உடைந்து போனேன். நமது கூட்டு மனசாட்சி எங்கே? வெறுப்பும் விஷமும் மனித குலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும். மணிப்பூரில் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே பாஜக நிர்வாகி குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கொடூர குற்றத்தை செய்தவர்களுக்கு மரண தண்டனையை வழங்க வேண்டும். இது போன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபட்ட ஆண்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும், அதனை பார்த்துக்கொண்டிருந்தவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Centre May Act Against Twitter Over Video Of Manipur Women Paraded Naked
ஜெர்மனி : பொது இடங்களில் பெண்கள் மேலாடையில்லாமல் இருக்க அனுமதி - நிர்வாணத்தை பழகுவது ஏன்?

இந்த சம்பவம் தொடர்பாக, கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவின் கீழ் குற்றவாளிகளுக்கு எதிராக நோங்போக் செக்மாய் காவல்நிலையத்தில் மே 18 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது. இதற்கிடையில் மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக அழைத்து செல்லும் வீடியோவை அகற்றுமாறு ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Centre May Act Against Twitter Over Video Of Manipur Women Paraded Naked
கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com