கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜெர்மன் பெண் என்னை லே ஹோட்டலில் தன்னுடன் வைத்திருந்தார். கர்ப்பமான பிறகு அந்தப் பெண் ஜெர்மனிக்குத் திரும்பினார். சில வருடங்கள் கழித்து தன் குழந்தையுடன் என்னை சந்திக்க வந்திருந்தார்.
கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?
கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?Representational

இந்தியாவின் வடக்கு எல்லைக்கு அருகில் இருக்கும் லடாக் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக இருக்கிறது.

லடாக்கில் இருந்து வடமேற்கு திசையில் தொலவில் இருக்கும் கிராமமான கார்கோனில் வசிக்கும் மக்கள் தங்களை உலகில் எஞ்சியிருக்கும் கடைசி 'தூய ஆரியர்கள்' எனக் கருதுகின்றனர்.

ஜெர்மனியில் நாஜி இன வெறியர்கள் தங்களை ஆரியர்கள் எனவும், உலகிலேயே மிக உயர்ந்த இனமாகவும் கருதினர்.

நாஜிக்கள் மாஸ்டர் ரேஸ் என்று அழைத்த தூய ஆரியர்கள் லடாக்கில் இருக்கும் இந்த சிறிய கூட்டம் தானா என்பதை உறுதியாகக் கூற முடியாது.

இந்த மக்களை லடாக்கில் உள்ள மற்ற மக்கள் ப்ரோக்பாக்கள் எனக் கூறுகின்றனர்.

இந்த வார்த்தைக்கு 'நாடோடிகள்' என்று அர்த்தம்.

One Year of News Sense
One Year of News SenseTwitter

தூய ஆரியர்கள்

இவர்கள் லடாக்கின் மற்ற மக்களிடம் இருந்து வித்தியாசமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர்.

இயற்கையை வணங்கும் இவர்கள், தங்களை தூய ஆரிய மக்களாக கருதுகின்றனர்.

ப்ரோக்பாக்கள் பௌத்த மதத்தவர்களாக இருந்தாலும் நெருப்பு வழிபாட்டிலும் பலி கொடுப்பதிலும் ஈடுபடுகின்றனனர்.

இவர்களில் இந்த காலத்து இளைஞர்களிடம் பலி கொடுப்பதற்கு எதிரான மனப்போக்கு இருப்பதாக பிபிசி கட்டுரை ஒன்று கூறுகின்றது.

இவர்களின் முக அமைப்பு லடாக்கில் இருக்கும் மற்ற மக்களின் மங்கோலிய முக அமைப்பில் இருந்து வேறுபட்டிருக்கிறது.

பியாமா, காகர்கோன், டார்ச்சிக், தாஹ் மற்றும் ஹனு ஆகிய பகுதிகளில் இவர்கள் வசிக்கின்றனர்.

ஆரியர்கள் மிகவும் உயரமாகவும் வெள்ளையாகவும் திருத்தமான முக அமைப்புடனும் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர்களைப் பார்க்கும் பொது அப்படித் தான் தோன்றும்.

கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?
Bruce Lee : தெரிந்த மனிதன் தெரியாத உண்மைகள்- ஓர் உத்வேக கதை!

முக அமைப்பும் வேறுபட்ட கலாச்சாரமும் இவர்கள் தூய ஆரியர்கள் என்பதற்கு சான்றாக இருக்குமா?

நிச்சயமாக இல்லை. இது குறித்து அங்குள்ள மக்களிடம் கேள்வி எழுப்பினால், "ஜெர்மன் நிபுணர் ஏ.எச். ஃப்ராங்கி தனது 'தி ஹிஸ்டரி ஆஃப் வெஸ்டர்ன் திபெத்' என்ற புத்தகத்தில் எங்கள் மக்களை ஆரிய இனம் என்று குறிப்பிட்டுள்ளார்" என கூறுவதாக பிபிசி கட்டுரை எடுத்துரைக்கிறது.

மேலும் பல வரலாற்றாசிரியர்கள் இந்த மக்களை தூய ஆரிய இனமாக கூறியுள்ளதை குறிப்பிடுகின்றனர்.

இவற்றையும் வாசியுங்கள்

சாவித்ரி தேவி: ஹிட்லரின் பாசிசத்தை ஆதரித்த மர்மப் பெண்

ஹிட்லர் : 1000 குழந்தைகளை Hitler-யிடம் கொடுத்த தாய்மார்கள் - என்ன காரணம் தெரியுமா?

யாழ்ப்பாண நூலகம் : நெருப்பு கொண்டு அணைக்கப்பட்ட தமிழர்களின் அறிவொளி - ஒரு வரலாற்று பயணம்

மொழி வழி தொடர்பு

இவர்களது சமூகத்தில் மாடுகளை விட ஆடுகளுக்கு அதிக மதிப்பு இருக்கிறது. ஆட்டு பால் அதிலிருந்து கிடைக்கும் நெய் ஆகியவற்றையே உபயோகிக்கின்றனர்.

ஆனால் இந்த காலத்தின் தேவைக்கு ஏற்ப கொஞ்சம் பசுக்களையும் வளர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

இவர்கள் இந்தோ - ஐரோப்பிய மொழியைப் பேசுகின்றனர்.

இந்த மொழி லடாக்கின் மற்ற மொழிகளில் இருந்து மாறுபட்டதாக உள்ளது.

மேலும் அதிக சமஸ்கிருத வார்த்தைகளும் இதில் இருக்கின்றன.

மொபைல் வளர்ச்சி காரணமாக எல்லைக்கு அப்பால் இதே மொழிப்பேசும் பாகிஸ்தானின் கில்கிட் பகுதியில் உள்ள இளைஞர்களிடம் கார்கோன் இளைஞர்கள் தொடர்பு கொள்கின்றனர்.

அக்டோபர் மாதம் அறுவடை காலத்தில் கொண்டாடப்படும் பொனோனா இவர்களின் முக்கிய விழாவாக இருக்கிறது.

ஆரியர்களின் வரலாறு

இவர்களின் வரலாறு நிச்சயமாக கேள்விகளுக்கும் ஆய்வுகளுக்கும் உட்பட்டது.

தங்கள் சமூகம் பேரரசர் அலெக்சாண்டரின் வீரர்களின் வழித்தோன்றல்கள் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும் பாகிஸ்தானின் கலாஷ் சாதி, இமாச்சல பிரதேசத்தில் உள்ள மலானா மற்றும் படா பங்கால் பகுதி மக்களும் இதே போன்றே தங்களை முன்னிறுத்துகின்றனர்.

அவர்களின் மூதாதையர்கள் ஏழாம் நூற்றாண்டில் கில்கிட்-பல்டிஸ்தானிலிருந்து வந்து படாலிக் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியேறியிருக்கலாம் என்று ப்ரோக்பா நாட்டுப்புறக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரியர்களின் வரலாறு என்பது இந்திய அரசியலில் மிக முக்கிய பகுதியாக இருக்கிறது.

ஆய்வுகளில் ஆரியர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து Bronze age எனப்படும் கி.மு 3000 - 1200 இடைப்பட்ட நூற்றாண்டுகளில் பல குழுக்களாக இந்தியாவுக்கு வருகைத் தந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இவர்கள் உணவுக்காக இடம் பெயர்ந்து திரிந்த நாடோடிகளா அல்லது அரசாங்கத்தைப் பிடிக்க ஆயுதம் ஏந்தியவர்களா என்பது இன்றும் விவாதமாக உள்ளது.

ப்ரோக்பா மக்களின் டி.என்.ஏ-வை பரிசோதிக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் அதிக ஆராய்ச்சி தேவை எங்கின்றனர்.

கர்ப்ப சுற்றுலா

ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் நாஜி பெண்கள் தூய ஆரிய ஆண்களுடன் மட்டுமே குழந்தைகள் பெற்று ஆரிய இனம் செழிக்க உதவ வேண்டும் என்கிற கட்டாயம் இருந்தது.

இன்றும் இனவெறி அல்லது இனம் சார்ந்த கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்கள் ஜெர்மனியில் இருக்கின்றனர்.

ப்ரோக்பா மக்கள் வசிக்கும் கிராமங்களில் 'தூய ஆரிய விதை'களைத் தேடி ஜெர்மனி பெண்கள் இங்கு வரும் கதைகள் ஏராளம் இருப்பதாக பிபிசி கூறுகிறது.

ஆனால் இவைக் குறித்து வெளிப்படையாக பேச யாரும் முன்வருவதில்லை.

2007 ம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் சஞ்சீவ் சிவன் இயக்கிய the achtung baby in search of purity ஆவணப்படத்தில் ஒரு ஜெர்மானிய பெண் இதனை ஒப்புக்கொண்டுள்ளார்.

பெயர் வெளியில் சொல்ல விரும்பாத ஒரு ப்ரோக்பா இளைஞர், "பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஜெர்மன் பெண் என்னை லே ஹோட்டலில் தன்னுடன் வைத்திருந்தார். கர்ப்பமான பிறகு அந்தப் பெண் ஜெர்மனிக்குத் திரும்பினார். சில வருடங்கள் கழித்து தன் குழந்தையுடன் என்னை சந்திக்க வந்திருந்தார்" என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?
Nataliya Kuznetsova: ஆண்களே பார்த்து பொறாமைப்படும் உலகின் மிக வலுவான பெண்மணி - யார் இவர்?

ப்ரோக்பாக்களின் நிலை என்ன?

இந்த மக்கள் கூட்டத்தில் பெண்கள் தற்போது தான் கல்வி பெற தொடங்கியுள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் இல்லை.

பாதாமி (வாதுமை) பழத் தோட்டங்கள், இராணுவம் மற்றும் எல்லைகளில் சாலை அமைப்பதால் உருவான வேலை வாய்ப்புகள் தான் இந்த மக்கக்களுக்கு முக்கிய வருமானமாக இருக்கிறது.

இந்த எல்லையோர கிராமத்தில் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டும்தான் மின்சாரம் இருக்கிறது.

கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?
குர்து மக்கள் : தனி நாடு -  மத்திய கிழக்கில் போராடும் ஒரு தேசிய இனத்தின் விறுவிறு வரலாறு!

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதனால் அதன் மூலம் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும் என்கிற நம்பிக்கையும் இந்த மக்களுக்கு உள்ளது.

இங்கிருக்கும் இளைஞர்களில் சிலர் வேலை வாய்ப்புகள் கிடைத்தால் நகரங்களுக்கு குடிபெயர தயாராக உள்ளனர்.

ஆனால் வேலை வாய்ப்புக்காக தங்களது அடையாளத்தை இழக்கவும் அவர்கள் தயாராக இல்லை.

அடையாளத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் போராட்டத்தில் இந்த இளைஞர்கள் சிக்கியுள்ளனர்.

கர்ப்பம் தரிக்க இந்தியாவுக்கு வரும் ஜெர்மனி பெண்கள்: தூய ஆரியர்கள் இருப்பது உண்மையா?
Lake Anjikuni : அத்திப்பட்டி போல காணாமல் போன கிராமம் - தீர்க்கப்படாத மர்மப் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com