Chandigarh University Protest
Chandigarh University ProtestTwitter

Chandigarh University : மாணவிகளின் குளியல் வீடியோக்களை இணையத்தில் கசியவிட்ட மாணவி கைது

மாணவிகளின் அந்தரங்க வீடியோக்கள் கசியவிட்டதையடுத்து பல மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.
Published on

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் சக தோழிகளின் அந்தரங்க வீடியோக்களை பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கசியவிட்டதாகக் கூறப்பட்டதையடுத்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட மாணவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றம்சாட்டப்பட்ட பெண் சட்டவிரோதமாக நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை சிம்லாவில் உள்ள ஒரு ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார். இதன் விளைவாக அந்த வீடியோக்கள் இணையத்தளத்தில் பரவியதாகக் கூறப்படுகிறது.

மாணவிகளின் அந்தரங்க வீடியோக்கள் கசியவிட்டதையடுத்து பல மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக சமூக ஊடகப் பதிவு வெளியாகி இருப்பதை பல்கலைக்கழகமும் காவல்துறையும் மறுத்துள்ளன.

மாணவி ஒருவர் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Chandigarh University Protest
காதலனால் விற்கப்பட்ட பெண் : பாலியல் கொடுமைகளில் இருந்து மீண்டது எப்படி?

மாணவர்கள் அமைதியாக இருக்குமாறு பஞ்சாப் கல்வி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையில், கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அமைதியாக இருக்குமாறு வலியுறுத்தினார்.

"இது மிகவும் உணர்திறன் வாய்ந்த விஷயம் மற்றும் எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் கண்ணியம் தொடர்பானது. ஊடகங்கள் உட்பட அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Chandigarh University Protest
பாலியல் தொழில் நடத்திய மேகாலயா பாஜக தலைவர்? பாக்கெட் கணக்கில் ஆணுறை - யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com