காதலனால் விற்கப்பட்ட பெண் : பாலியல் கொடுமைகளில் இருந்து மீண்டது எப்படி?

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்திய வழக்கில் பீகார் உத்தராகண்ட், உத்தர பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த 6 பேரை சிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதில் ஒரு பெண்ணும் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலனும் அடங்குவர்.
Woman
WomanTwitter

பெண்களை கடவுளாக வழிபடுவதாகக் கூறிக்கொள்ளும் இந்த நாட்டில் தான் ஒரு பெண் தனது விவரம் தெரியாத பதின் வயதுகளில் இருந்து மூன்று முறை விற்கப்பட்டும் பல முறை வன்புணர்வு செய்யப்பட்டும் இருக்கிறார்.

தனது வாழ்க்கையை ஆண்களின் இச்சைகளால் இழந்த அவர், இப்போது கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்களால் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு கடத்தப்பட்ட அந்த பெண், 4 மாதங்களில் பல முறை பாலியல் வன்முறைகளுக்கு ஆளானதுடன் அவரை விட 30 வயது மூத்த ஒருவருக்கு கட்டாயமாகத் திருமணம் செய்துவைக்கப்பட்டிருக்கிறார் என மேற்கு வங்க சிஐடி அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருக்கின்றனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்திய வழக்கில் பிகார், உத்தராகண்ட், உத்தர பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த 6 பேரை சிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அதில் ஒரு பெண்ணும், பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலனும் அடங்குவர்.

தற்போது 22 வயதாகும் அந்த பெண் அவரது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். "கடவுளின் அருளால் எங்கள் மகள் எங்களிடம் திரும்ப வந்திருக்கிறாள். நடந்தவை நடந்துவிட்டது. அவளது துயரங்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டுவிட்டார்கள்" என்று அந்த பெண்ணின் தந்தை கூறியிருக்கிறார்.

அந்த பெண்ணின் தந்தை ஒரு துணிக்கடையில் வேலை செய்கிறார். இப்போது அந்த பெண்ணுக்கு மாப்பிள்ளைப் பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரில் நான்கு பேருக்கு போக்சோ நீதிமன்றத்தால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. 2 பேருக்கு 10 ஆண்டுகள்.

என்ன நடந்தது?

ஒரு அப்பாவிப் பெண் தனது வாழ்வில் மறக்க முடியாத துயரங்களை அனுபவித்த இந்த கதை சமூக வலைத்தளங்களிலிருந்து தொடங்கியது.

ஏழு வருடங்களுக்கு முன்னர் சமுக வலைத்தளத்தில் பார்த்த ஒருவரை அந்த பெண் காதலித்துள்ளார். அவருடன் வாழ்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

ஜனவரி 7 2015ல் கொல்கத்தாவில் பெண்ணின் காதலன் ராகுல், மற்றும் ராகுலின் நண்பர், அந்த பெண்ணை பாபுகாட் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பீகாருக்கு கடத்தியிருக்கிறார்.

Woman
ரஜனி பண்டிட் : 22 ஆண்டுகளில் 80000 வழக்குகளை தீர்த்த லேடி ஜேம்ஸ் பாண்ட் - Detective-ன் கதை

பீகாரில் கமல் என்ற கடத்தல் காரரிடம் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். அங்கிருந்து அந்த பெண் உத்தர பிரதேசம் மாநிலம் பிஜ்னோரில் உள்ள சித்ரா என்பவரிடம் விற்கப்பட்டுள்ளார்.

45 வயது நபரான சித்ரா அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துள்ளார். சித்ராவின் மகனால் அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

எப்படித் தப்பினார்?

முதல்முறையாக சித்ராவின் மொபைல் போனிலிருந்து போன் செய்வதற்கு அந்த பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது அம்மாவுக்கு கால் செய்த அவர் தனது இருப்பிடம் பற்றியத் தகவலைக் கூறினார் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Woman
பில்லா, ரங்கா : 80களில் ஒட்டுமொத்த இந்தியாவை அலற வைத்த இருவர் - சினிமாவை விஞ்சும் நிஜ கதை

பொண்ணின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அங்கு சென்ற சிஐடி அதிகாரிகள் ஒரு ரயில் நிலையத்தின் மூலையில் அவர் அவல நிலையில் கிடந்ததைப் பார்த்திருக்கின்றனர். காதலனால் கடத்திச் செல்லப்பட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு மே 2015ல் அவர் மீட்கப்பட்டார்.

அதிகாரிகள் கண்டுபிடித்த போது அந்த பெண் பேச முடியாத நிலையில் இருந்திருக்கிறார். துயர நிகழ்வுகளால் மனநல பாதிப்படைந்திருந்த அவர், மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் தான் மனமுடைந்து தனக்கு நடந்தவற்றைக் கூறியிருக்கிறார்.

ஏழு வருடங்களுக்கு கழித்து இப்போது அந்த பெண் பள்ளிப்படிப்பை நிறைவு செய்து கல்லூரிக்கு செல்ல தயாராகவும் ஆர்வமாகவும் உள்ளார்.

Woman
மாணவியை கொலை செய்த நபர்: மரண தண்டனையை ஒளிபரப்ப நீதிமன்றம் அழைப்பு - எங்கே? என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com