Chandrayaan 3: விண்ணில் பாய தயாராக இருக்கிறது சந்திரயான் 3 - விண்கலம் எப்போது புறப்படும்?

கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவின் சந்திரயான் 2 மிஷன் தோல்வியடைந்ததை அடுத்து, இம்முறை விண்கலம் ஏவுவதில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியிருக்கிறார்
Chandrayaan 3: விண்ணில் பாய தயாராக இருக்கிறது சந்திரயான் 3 - விண்கலம் எப்போது புறப்படும்?
Chandrayaan 3: விண்ணில் பாய தயாராக இருக்கிறது சந்திரயான் 3 - விண்கலம் எப்போது புறப்படும்?ட்விட்டர்
Published on

விண்ணில் பாய தயாராக இருக்கிறது இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம். இதற்கான ஒத்திகை கடந்த ஜூலை 11 ஆம் தேதி நிறைவடைந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ் தவான் ஏவுதளத்திலிருந்து இந்த விண்கலம் ஜூலை 14 ஆம் தேதி 2.35 மணியளவில் விண்ணில் ஏவப்படும். இதற்கான கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவின் சந்திரயான் 2 மிஷன் தோல்வியடைந்ததை அடுத்து, இம்முறை விண்கலம் ஏவுவதில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் என் டி டி வியின் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்

நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மேற்கொள்ளும் இம்முயற்சி வெற்றிகரமாக முடியவேண்டும் என, நேற்று இஸ்ரோ விஞ்ஞானிகள், சந்திரயான் 3 மினியேச்சர் மாடலை எடுத்துக்கொண்டு திருப்பதியில் சிறப்பு பூஜைகள் செய்வித்தனர்.

இந்நிலையில் இன்று மதியம் 2.35 மணியளவில் விண்ணில் பாய தயாராக இருக்கிறது சந்திரயான் 3. இந்த விண்கலம் ஆகஸ்ட் 23ல் நிலவை சென்றடையும். இந்த திட்டம் ரூ.615 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது

இந்த விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 (எல்விஎம் 3) கனரக ஏவுகணை வாகனத்தில் ஏவப்படும். நிலவில் சாஃப்ட் லேண்டிங்க் செய்ய முற்படுகிறது இந்தியா.

இந்த மிஷன் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், நிலவில் தென் துருவத்தில் (சவுத் போலில்) விண்கலத்தை ஏவிய முதல் நாடு என்ற பெருமையை பெறும் இந்தியா.

கடந்த 2008ல் இந்தியா நிலவில் ஆராய்ச்சி செய்ய தனது முதல் முயற்சியை மேற்கொண்டது. அப்போது விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 1 நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது, உலகையே ஸ்தம்பித்தது.

இந்த விண்கலம் 2009 ஆகஸ்ட் வரை செயலில் இருந்தது. நிலவில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு தரவுகளை சேகரிக்க உதவியது

2019 ஆம் ஆண்டில், சந்திரயான் -2 இன் லேண்டர் திட்டமிட்ட பாதையில் இருந்து விலகி தரையிறங்கியது. எனினும், ஆர்பிட்டர் இன்னும் சந்திரனை வட்டமிட்டு தரவுகளை அனுப்புகிறது.

தற்போது சந்திரயான் 3ல் விக்ரம் என்ற லேண்டரும், பிரக்யான் என்ற ரோவரும் எடுத்துசெல்லப்படுகிறது.

லேண்டர் பத்திரமாக தரையிறங்க உதவும், பிறகு ரோவர் நிலவின் பரப்பில் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். பூமியின் நாட்களில் கணக்கிடுகையில், 14 நாட்கள் இந்த ஆய்வுகள் நடக்கும்

Chandrayaan 3: விண்ணில் பாய தயாராக இருக்கிறது சந்திரயான் 3 - விண்கலம் எப்போது புறப்படும்?
நிலவில் நீர் இருப்பதை முதலில் கண்டுபிடித்து இந்தியாதானா? பலரும் அறியாத சுவாரஸ்யங்கள்!

சந்திரயான் 3 விண்ணில் பாய்வதை நேரில் காண பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறது இஸ்ரோ குழு. இதனை மக்கள் ஸ்ரீஹரிகோட்டாவின் SDSC-SHAR இல் உள்ள வெளியீட்டு காட்சி கேலரியில் இருந்து பார்க்கலாம். இதற்கு முன்பதிவு செய்ய இணையதளத்தையும் இஸ்ரோ பகிர்ந்திருந்தது

இது குறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "ஜூலை 14 மதியம் 2.35 மணியளவில், சந்திரயான் - 3 விண்ணில் ஏவப்படும். எல்லாம் சரியாக நடந்தால், ஆகஸ்ட் 23 அன்று (நிலவில்) தரையிறங்கும். இது சந்திரனில் சூரிய உதயம் எப்போது என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்ட தேதியாகும்.

இது கணக்கீடுகளைப் பொறுத்ததே. ஒருவேளை தாமதமாகும் எனில், செப்டம்பரில் விண்கலத்தை தரையிறக்கவேண்டும்." என்றார்.

மேலும் சில கூறுகள் செயலிழந்தாலும் வெற்றிகரமாக தரையிறங்கும் வகையில் புதிய விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கினார். சென்சார் செயலிழப்பு, என்ஜின் செயலிழப்பு, அல்காரிதம் தோல்வி மற்றும் கணக்கீடு தோல்வி உள்ளிட்ட பல காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் உருவாக்கப்பட்டன.

Chandrayaan 3: விண்ணில் பாய தயாராக இருக்கிறது சந்திரயான் 3 - விண்கலம் எப்போது புறப்படும்?
NASA : பூமியை தாக்க வந்த விண்கல்லை தடுத்த DART விண்கலம்- சினிமாவை மிஞ்சி விஞ்ஞானிகள் சாதனை

என்னென்ன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் சந்திரயான் 3?

நிலவின் தென் துருவத்தில் உறைந்திருக்கும் பனிக்கு அடியில் இருக்கும் பாறைகளை ஆராய்ந்து, சூரிய மண்டலமும் பூமியும் எப்படி தோன்றின என்பதை நாம் அறியலாம்.

மேலும், செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள நிலவில் இருந்து ராக்கெட்கள் அனுப்புவது சுலபம். இந்த ஆராய்ச்சியின் மூலம் நிலவில் ஏவுதளம் அமைக்க ஏதுவாக இருக்கும். இன்னும் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளலாம்.

Chandrayaan 3: விண்ணில் பாய தயாராக இருக்கிறது சந்திரயான் 3 - விண்கலம் எப்போது புறப்படும்?
ISRO : விண்வெளிக்கு சுற்றுலா செல்ல ஆசையா? - டிக்கெட் எவ்வளவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com