NASA : பூமியை தாக்க வந்த விண்கல்லை தடுத்த DART விண்கலம்- சினிமாவை மிஞ்சி விஞ்ஞானிகள் சாதனை

மனித இனம், ஒரு முக்கியமான காலகட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஒரு ஆபத்தான விண்கல் மூலம் நமக்கு ஏற்படவிருந்த ஆபத்தை நாமே தடுத்து நிறுத்தும் திறனைப் பெற்றுள்ளோம். என நாசாவின் கோள் அறிவியல் பிரிவின் இயக்குநர் லாரி கிளேஸ் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனை: விண்கல்லைத் தாக்கிய நாசாவின் டார்ட் விண்கலம்
வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனை: விண்கல்லைத் தாக்கிய நாசாவின் டார்ட் விண்கலம்Twitter
Published on

பூமியை நோக்கி வந்த ராட்சத விண்கல் ஒன்றை, கடந்த திங்கட்கிழமை நாசாவின் விண்கலம் ஒன்று தாக்கியுள்ளது. பூமியிலிருந்து சுமார் 70 லட்சம் மைல் தொலைவில் இப்படி ஒரு விண்கல் தாக்கப்பட்டு திசை திருப்பப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

டபுல் ஆஸ்டிராய்ட் ரீடைரக்‌ஷன் டெஸ்ட் (Double Asteroid Redirection Test - DART) என்கிற விண்கலம் திங்கள்கிழமை ஜி எம் டி நேரப்படி 23:14 மணிக்கு டைமார்ஃபஸ் (Dimorphos) என்கிற ராட்சத விண்கல்லைத் தாக்கியது. இந்த விண்கலம் கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு முன் கலிஃபோர்னியாவிலிருந்து ஏவப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மனித இனம், ஒரு முக்கியமான காலகட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஒரு ஆபத்தான விண்கல் மூலம் நமக்கு ஏற்படவிருந்த ஆபத்தை நாமே தடுத்து நிறுத்தும் திறனைப் பெற்றுள்ளோம். என நாசாவின் கோள் அறிவியல் பிரிவின் இயக்குநர் லாரி கிளேஸ் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

ஒரு பிரமாண்ட எகிப்து பிரமீட் அளவுக்கு இருக்கும் டைமார்ஃபஸ் என்கிற விண்கல், டிடிமோஸ் (Didymos) என்கிற விண்கல்லைச் சுற்றி வருகிறது. டைமார்ஃபஸ் முட்டை வடிவத்தில் கரடு முரடான மேற்பரப்பைக் கொண்டிருந்தது. 

நாசா ஏவிய டார்ட் விண்கலம் சுமார் மணிக்கு14,500 மைல் வேகத்தில் டைமார்ஃபஸ் விண்கல் மீது மோதியது. டார்ட் விண்கலம் டைமார்ஃபஸ் மீது மோதுவதற்கு ஒரு சில நொடிகள் முன்பு வரை அதில் பொருத்தப்பட்டு இருந்த கேமரா மூலம் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு உள்ளன.

அக்காணொளியை நாசா அமைப்பு தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. டார்ட் கச்சிதமாக டைமார்ஃபஸ் மீது மோதிய மகிழ்ச்சியில் நாசா விஞ்ஞானிகள் குழு ஆராவாரத்தில் கூச்சலிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதை இக்காணொளியில் பார்க்கலாம்.

இனி பூமி கோளில் வாழும் மனிதர்கள் டைமார்ஃபஸ் மற்றும் டிடிமோஸ் குறித்த அச்சமின்றி நிம்மதியாக வாழலாம். இந்த விண்கற்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையாகச் சூரியனைச் சுற்றி வரும்.

மேலும், விண்வெளியில் இருக்கும் கோடிக் கணக்கான விண்கற்களில், குறைந்தபட்சமா அடுத்த நூறாண்டுக் காலத்துக்கு எதுவும் பூமிக்கு ஆபத்து விளைவிப்பதாக இல்லை என்றும் அறிவியல் சமூகம் கூறியுள்ளது. 

டைமார்ஃபஸ் விண்கல், டிடிமோஸ் விண்கல்லை 11 மணி 55 நிமிடங்களில் சுற்றி வந்து கொண்டிருந்தது. தற்போது நாசாவின் தாக்குதல் மூலம் இனி டைமார்ஃபஸ் 10 நிமிடம் குறைவான நேரத்துக்குள்ளேயே டிடிமோஸைச் சுற்றி வந்துவிடும்.

பூமி கோளின் மேற்பரப்பில் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த விண்கற்களைப் பார்க்க முடியாது என்கிற போதிலும், விண்கற்களிலிருந்து வெளிவரும் ஒளி மற்றும் ஒளி உமிழப்படும் முறையை வைத்துக் கண்காணிக்கலாம். 

விண்வெளியில் ஒரு விண்கல்லை மனித இனம் தகர்ப்பதை, இத்தனை நாள் நாம் படத்தில் தான் பார்த்து வந்தோம். முதல்முறையாக தற்போது எதார்த்தத்தில் நிகழ்த்திக் காட்டியுள்ளோம்.

டார்ட் விண்கலம் மோதியதால், டைமார்ஃபஸ் விண்கல்லில் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது குறித்து நமக்கு எந்தவித தரவுகளும் இல்லை.

வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனை: விண்கல்லைத் தாக்கிய நாசாவின் டார்ட் விண்கலம்
பூமியின் தகுதியை தாண்டி பெருகுகிறதா மனித இனம்? அறிவியல் சொல்வதென்ன?

ஒருவேளை டார்ட் விண்கலம் குறி தவறி இருந்தால், அது மீண்டும் டைமார்ஃபஸ் விண்கல்லை இலக்கு வைத்துத் தாக்கும் அளவுக்கு அந்த விண்கலத்தில் எரிபொருள் இருக்கும், அதைக் கொண்டு அடுத்த இரண்டு ஆண்டுக் காலத்துக்குள் இரண்டாவது முறை டைமார்ஃபஸை இலக்கு வைக்கலாம் என்றும் என் டி டிவி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டார்ட் விண்கலம், விண்கல்லில் மோதுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே அதிலிருந்து LICIACube என்கிற செயற்கைக் கோள் பிரிந்தது. எனவே அடுத்த சில வாரங்களில், இந்த செயற்கைக் கோளிலிருந்து, டைமார்ஃபஸ் மீது டார்ட் மோதியது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது தொடர்பான புகைப்படங்களைப் பார்க்க முடியும்.

மறக்க வேண்டாம்

சிக்ஸூலப் (Chicxulub) என்கிற, சுமார் 6 மைல் அகலம் கொண்ட விண்கல் சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் மோதி டைனோசர் போன்ற பிரமாண்ட உயிரினங்களை அழித்த சம்பவம் இங்கு நினைவுகூரத்தக்கது. அந்த விண்கல் மோதிய பிறகு பூமி கோளில் பல ஆண்டுகள் குளிர் காலம் போல் நிலவியதும், அது ஒரு பெரிய அழிவை ஏற்படுத்தியதையும் மனிதம் இனம் தொடர்ந்து நினைவுகூறி வருகிறது.

டைமார்ப்ஃஸ் போன்ற விண்கல் ஒன்று பூமியில் மோதினால் அது, இதுவரை உலகம் காணாத சக்தி வாய்ந்த அணுக்குண்டு வெடித்த அளவுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என என் டி டி வி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சோதனை: விண்கல்லைத் தாக்கிய நாசாவின் டார்ட் விண்கலம்
உக்ரைன் வானில் பறக்கும் தட்டுகள் : ரஷ்யாவின் சதியா? அமெரிக்க ராணுவம் எச்சரிக்கை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com