”மோடி என்ற பெயரின் பொருள்...” வைரலாகும் பாஜக குஷ்பூவின் பழைய ட்வீட்!

பாஜகவில் இணைவதற்கு முன் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த போது நடிகை குஷ்பூ பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
”மோடி என்ற பெயரின் பொருள்...” வைரலாகும் பாஜக குஷ்பூவின் பழைய ட்வீட்!
”மோடி என்ற பெயரின் பொருள்...” வைரலாகும் பாஜக குஷ்பூவின் பழைய ட்வீட்!ட்விட்டர்
Published on

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் எம் பி ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜகவின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பூவின் பழைய ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார் ராகுல் காந்தி. அப்போது கர்நாடகாவின் கோலார் பகுதியில் பேசியவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்திருந்தார்.

இது குறிப்பிட்ட சமூகத்தை தாக்குவதாக இருக்கிறது என குஜராத்தை சேர்ந்த சூரத் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

நான்கு ஆண்டுகள் விசாரணைக்கு பின், கடந்த 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வித்தித்தது சூரத் நீதிமன்றம். இதனை தொடர்ந்து நேற்று இவரை எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளதாக நாடாளுமன்ற அறிக்கை வெளியானது.

”மோடி என்ற பெயரின் பொருள்...” வைரலாகும் பாஜக குஷ்பூவின் பழைய ட்வீட்!
”8 வயதில் அப்பாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்” - மனம் திறந்த நடிகை குஷ்பு

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில், பாஜகவில் இணைவதற்கு முன் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருந்த போது நடிகை குஷ்பூ பதிவிட்டிருந்த ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

குஷ்பூ அந்த ட்வீட்டில், “இங்கே மோடி அங்கே மோடி, எங்கு நோக்கினும் மோடி! ஆனால் எல்லா மோடியின் பெயருக்கு அருகிலும் ஊழல் என்ற குடும்பப்பெயர் இருக்கிறது.

மோடி என்றால் ஊழல், மோடியின் என்ற பெயரின் பொருளை ஊழல் என்று மாற்றிவிடுவோம். சரியாக பொருந்தும்.

நீரவ், லலித், நமோ = ஊழல்” என்று குஷ்பூ பதிவிட்டிருந்தார்.

இதனை தேடியெடுத்த நெட்டிசன்கள் இணையத்தில் பகிர, காட்டுத்தீயாய் பரவி வருகிறது குஷ்புவின் 5 வருட பழைய ட்வீட். இது 2018 பிப்ரவரி மாதம் பதிவான ட்வீட்.

எனில் ராகுல் காந்திக்கு முன்னதாகவே பிரதமரை விமர்சித்திருக்கிறார் குஷ்பூ!

2020ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

”மோடி என்ற பெயரின் பொருள்...” வைரலாகும் பாஜக குஷ்பூவின் பழைய ட்வீட்!
தமிழை எழுத்து பிழையுடன் ட்வீட் செய்த குஷ்பூ- ட்ரால் செய்த நெட்டிசன்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com