8 வயது முதல் தன் தந்தையால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு தெரிவித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. இவரது கரியரின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டினர்.
சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் கால்பதித்தார் குஷ்பு. முதலில் திமுக, மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் பாஜகவில் இணைந்தார்.
சமீபத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பொறுப்பேற்றார் குஷ்பு. இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய குஷ்பு, 8வயது முதல் தன் தந்தையால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறர்.
அந்த நேர்காணலில், தொகுப்பாளர் கேள்வி ஒன்றினை எழுப்பினார். ஆண்களை விட பெண்கள் கரியரில் வெற்றிப்பெற்றிருந்தால், ஏதாவது ஒரு கட்டத்தில் அதற்காக பெண்கள் இழிவுப்படுத்தப்பட்டனர். அதுபோன்று உங்களுக்கு ஏதேனும் அனுபவம் இருந்தால் பகிருங்கள் என்று கேட்டிருந்தார்.
முதலில் பேசியக் குஷ்பு, "எனக்கு சிறுவயது முதல் தந்தையால் துன்புறுத்தல்கள் இருந்தது" என்றார்.
“அம்மா நிறைய கஷ்டப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். எனது பெயருக்கு பின்னால் தந்தையின் பெயர் ஒன்று வேண்டும் என்பதற்காக மட்டுமே அவர் இருந்தார்” என்றார்.
மேலும் பேசியவர், "என் குடும்பத்தில் மற்றவர்கள் தந்தையுடன் தொடர்பில் இருந்தாலும், என்னால் அவரை என் தந்தை என்று ஏற்றுக்கொள்ளவோ, அழைக்கவோ முடியாது" என்றார்.
ஒரு குழந்தை, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, துன்புறுத்தப்பட்டால், அது அவர்களை மன ரீதியாக மிகவும் பாதிக்கும். ஒரு வடுவாக ஆறாமல் மனதில் நின்றுவிடும் என்றார். மேலும், தன் தந்தையால் துன்புறுத்தப்பட்டதாக சொன்னால், யாரும் தன்னை நம்பமாட்டார்கள் என நினைத்தாகவும் குஷ்பு தெரிவித்திருக்கிறார்.
தனக்கு நேர்ந்த கொடூரங்களை மறந்து, தன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல மிகவும் கஷ்டப்பட்டதாக குஷ்பு கூறினார்.
”என் அம்மா மிகவும் கடினமான ஒரு திருமண வாழ்க்கையை அனுபவித்தார். மனைவி, குழந்தைகளை துன்புறுத்துவது தன் உரிமை என நினைத்த ஒரு மனிதர் எங்களின் குடும்பத் தலைவராக அமைந்தார். தனது ஒரே மகளை பாலியல் ரீதியில் துன்புறுத்திய தந்தை அவர்.
8 வயது முதல், பாலியல் ரீதியாகவும், மற்ற வகைகளிலும் நான் துன்புறுத்தப்பட்டேன். 15 வயது வரை இந்த கஷ்டத்தை அனுபவித்தேன், இதற்கும் மேல் கொடுமைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் எதிர்த்து பேசினேன்” என்றார்.
அதன் பிறகு, அவரது தந்தை அவர்களை கைவிட்டுச் சென்றுவிட்டதாகவும் அவர்களது வாழ்வு கடினமானது என்றும் அந்த நேர்காணலில் குஷ்பு பகிர்ந்து கொண்டார்.
எனினும், குஷ்பு தனது தாயார் எல்லாவிதத்திலும் தன்னை ஆதாரித்து, சிறகடித்து பறக்க உதவினார் என்பதியும் கூறியிருக்கிறார்.
குஷ்புவின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust