21 ஆண்டுகளுக்குப் பிறகு தாடியை ஷேவ் செய்த நபர் : நெகிழ வைக்கும் காரணம்

சமூக ஆர்வலரான இவர் "மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்" என்ற புதிய மாவட்டம் உருவாகும் வரை தாடியை வெட்ட மாட்டேன் என்று சபதம் செய்திருந்தார்.
Chhattisgarh man
Chhattisgarh man Twitter
Published on

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த நபர் 21 ஆண்டுகளுக்குப் பிறகு தாடியை ஷேவ் செய்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் மகேந்திரகரில் வசிப்பவர் ராம்சங்கர் குப்தா. சமூக ஆர்வலரான இவர் "மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர்" என்ற புதிய மாவட்டம் உருவாகும் வரை தாடியை வெட்ட மாட்டேன் என்று சபதம் செய்திருந்தார்.

இதற்காக குப்தா 21 ஆண்டுகளாக தனது தாடியை ஷேவ் செய்யாமல் இருந்துள்ளார். மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மற்றும் சக்தி ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

Chhattisgarh man
மனிதர்கள் இனி 150 ஆண்டுகள் வாழலாம் - புதிய ஆய்வு முடிவு

இதனையடுத்து குப்தா முதன்முறையாக கடந்த ஆண்டு தனது தாடியை ஷேவ் செய்துக்கொண்டார். இருப்பினும், புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டம் நடைமுறைக்கு வர கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆனது.

இதனால் குப்தா மீண்டும் ஒரு வருடமாக தாடியை வெட்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு புதிய மாவட்டங்கள் அமைக்க அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

மானேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மற்றும் சக்தி ஆகிய இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க பாகேல் ஒப்புதல் அளித்ததாக மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Chhattisgarh man
22 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கும் நபர் : நெகிழ வைக்கும் காரணம்

இதன் மூலம் மாநிலத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேறியதும், அவர் தனது தாடியை சவரம் செய்து கொண்டார்.

இதே போன்று பீகாரைச் சேர்ந்த தரம்தேவ் ராம் என்பவர் தன் மேல் 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நிலத் தகராறுகள், விலங்குகள் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் முற்றிலும் நிற்கும் வரை குளிக்கப் போவதில்லை எனவும் உறுதிமொழி எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Chhattisgarh man
சீனா : மிகப்பெரிய கோடீஸ்வரரை 13 ஆண்டுகள் சிறையில் அடைத்த அரசு - உடையும் மர்மம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com