இந்த ஆண்டு ஆஸ்கர் பரிந்துரையில் ஆர்.ஆர்.ஆர் மற்றும் செலோ ஷோ என இரண்டு இந்திய திரைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
குஜராத்தை கதைக்களமாக கொண்ட செலோ ஷோ படத்தை பான் நளின் என்பவர் இயக்கினார். இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்த 6 சிறுவர்களில் ஒருவரான ராகுல் கோலி 10 வயதிலேயே இறந்துள்ள சம்பவம் மனதை கணக்க வைத்துள்ளது.
குஜராத்தி படமான செலோ ஷோ சிறுவயது ஆண் குழந்தைகளின் கொண்டாட்டத்தைப் பேசக்கூடியது. சௌராஷ்டிராவில் வளரும் ஒரு சிறுவன் மற்றும் புதியவற்றை ஆராய்ந்து கண்டுபிடிக்கும் அவனது ஆர்வம் நகர்த்தும் கதை.
ஆட்டோ ஒட்டுநர் ராமு கோலியின் மகன் ராகுல் அந்த குடும்பத்தின் கனவாக இருந்தார்.
"அக்டோபர் 14ம் தேதி படம் வெளியானதும் நம்ம வாழ்க்கையே மாறிடும் எனச் சொன்னான் ராகுல். ஆனால் அதற்கு முன்னாடியே அவன் போயிட்டான்" என ஊடகங்களில் கூறியுள்ளார் ராகுலின் தந்தை ராமு.
செல்லோ ஷோ படத்தின் முக்கிய கதாப்பாத்திரமான சாமியின் நெருங்கிய நண்பன் மனு பாத்திரத்தில் ராகுல் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல் கோலி லுகேமியா எனும் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
புற்று நோய்க்கு எதிரான 4 மாத போராட்டத்துக்கு பிறகு உயிரிழந்துள்ளார்.
இன்னும் இரண்டு நாட்களில் அக்டோபர் - 14ம் தேதி செலோ ஷோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust