Chitradurga: கர்நாடகாவில் இருக்கும் இந்த மறைக்கப்பட்ட கோட்டையின் வரலாறு என்ன?

இந்த சித்திரதுர்கா கோட்டை கர்நாடகா மாநிலம், சித்திரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதனை 10ஆம் நூற்றாண்டில் சாளுக்கியர்கள் ஆட்சி காலத்தில் கட்டியெழுப்பினர். எனினும், இந்த கோட்டை 17ஆம் நூற்றாண்டில், நாயக்கர்களின் ஆட்சி காலத்தில் தான் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டது என்று வரலாறு சொல்கிறது.
Chitradurga: கர்நாடகாவில் இருக்கும் இந்த மறைக்கப்பட்ட கோட்டையின் வரலாறு என்ன?
Chitradurga: கர்நாடகாவில் இருக்கும் இந்த மறைக்கப்பட்ட கோட்டையின் வரலாறு என்ன?twitter
Published on

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்வதற்கு முன்னர் பல வம்சத்து மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களின் பெரும்பாலானோர் கலையின் மீது ஆர்வமுள்ளவர்களாக இருந்தனர்.

இதன் விளைவாக அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பல தேசங்களிலும் அந்தந்த வம்சத்தினரின் சான்றாக, கட்டிக்கலைகளை உருவாக்கினர்.

கோவில்கள், மண்டபங்கள், பெரும் அரண்மனைகள், கோட்டைகளை எழுப்பினர்.

அவற்றில் ஒன்று கர்நாடகாவில் அமைந்துள்ள சித்திரதுர்கா கோட்டை. ஆனால், இதனை பற்றி அவ்வளவாக நாம் அறிந்திருக்க வாய்பில்லை. இதன் வரலாறு என்ன? இந்த பதிவில் காணலாம்

இந்த சித்திரதுர்கா கோட்டை கர்நாடகா மாநிலம், சித்திரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதனை 10ஆம் நூற்றாண்டில் சாளுக்கியர்கள் ஆட்சி காலத்தில் கட்டியெழுப்பினர்.

எனினும், இந்த கோட்டை 17ஆம் நூற்றாண்டில், நாயக்கர்களின் ஆட்சி காலத்தில் தான் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டது என்று வரலாறு சொல்கிறது.

நாயக்கர்கள் காலத்தில் இருந்த திறன்வாய்ந்த கட்டிடக்கலை நிபுணர்கள், ராணுவ யுக்தியாளர்கள் (strategists), இந்த கோட்டையை விரிவுப்படுத்தி, மேலும் பலம்வாய்ந்ததாக மாற்றினர்.

இதுவே இன்றளவும் கோட்டை வலுவாக நிற்க முக்கிய காரணமாக உள்ளது

இந்த சித்திரதுர்கா கோட்டை கட்டிடக்கலைகளின் அற்புதமாக உள்ளது. இந்த கோட்டை, மலைகளின் நடுவே அமைந்திருக்கிறது. இதுவே கோட்டைக்கு ஒரு இயற்கை அரணாக இருக்கிறது. இதனால் இந்த கோட்டையை கிரிதுர்கா என்றும் அழைக்கின்றனர். கிரி என்றால் மலை என்று பொருள்படும்

இதை தவிர இந்த கோட்டையைச் சுற்றி 7 அரண்கள் உள்ளன. இவை அனைத்துமே அந்த காலத்தில் மோட்டார் போன்றவற்றின் பயன்பாடு இல்லாமலே கட்டப்பட்டவையாகும்.

இந்த கோட்டை வளாகத்திற்குள் நிறைய கோவில்கள் உள்ளன. அவற்றில், ஹிடிம்பேஷ்வரா கோவில், ஏகனாதீஸ்வரி கோவில், கோபாலகிருஷ்ணா கோவில் நிச்சயம் பார்க்கவேண்டியவை. இந்த கோவில்களிலுள்ள நுணுக்கமான வேலைபாடுகள் அந்த காலத்து கலைஞர்களின் கைவினை திறனை பறைச்சாற்றுகிறது!

Chitradurga: கர்நாடகாவில் இருக்கும் இந்த மறைக்கப்பட்ட கோட்டையின் வரலாறு என்ன?
Janjira Fort: இந்தியாவின் இந்த வீழ்த்தப்படாத கோட்டை பற்றி தெரியுமா?

இந்த கோட்டையை பற்றிய பல கதைகள் அந்த பகுதி மக்களால் நம்பப்படுகிறது. அவற்றில் மிகவும் பிரபலமானது ஒணக்கே ஒப்பவ்வா என்ற பெண்ணின் கதை.

இந்த பெண்மணி மிகவும் தைரியமானவர். சித்திரதுர்கா மக்களுக்கு இவரது அர்ப்பணிப்புகள், சாதனைகள் ஊக்குவிக்கும் கதைகளாக இருக்கின்றன

இந்த பெண் ஒற்றை உலக்கையை வைத்து அந்த மாபெரும் கோட்டையை எதிரி படையெடுப்புகளில் இருந்து காத்தார் என்பது கூற்று.

இந்த சித்திரதுர்கா கோட்டை பெரிதும் மக்களால் அறியப்படாத தலங்களில் ஒன்றாக இருக்கிறது. இதன் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்திய தொல்லியல் துறை (ASI) இந்த கோட்டையை பாதுகாக்கவும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.

பெங்களூருவில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கோட்டைக்கு சாலை மார்க்கமாகவே செல்லலாம்

Chitradurga: கர்நாடகாவில் இருக்கும் இந்த மறைக்கப்பட்ட கோட்டையின் வரலாறு என்ன?
13ஆம் நூற்றாண்டு கோட்டை, 150 அடி ஆழமுள்ள குகைகள் - Gandikota பள்ளத்தாக்கின் வரலாறு என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com