13ஆம் நூற்றாண்டு கோட்டை, 150 அடி ஆழமுள்ள குகைகள் - Gandikota பள்ளத்தாக்கின் வரலாறு என்ன?

காலமாற்றத்தில், பெண்ணாறு நதி, எர்மாலா மலைகளின் பிரம்மாண்ட இளஞ்சிவப்பு கிரானைட் பாறைகளை செதுக்கி, இந்த பள்ளத்தாக்கை உருவாக்கியிருக்கிறது. இப்போது நாம் பார்த்துக்கொண்டிருப்பது, ஆண்டுகள் கடந்த ஒரு அற்புதமான இயற்கை உருவாக்கம்
13ஆம் நூற்றாண்டு கோட்டை, 150 அடி ஆழமுள்ள குகைகள் - Gandikota பள்ளத்தாக்கின் வரலாறு என்ன?
13ஆம் நூற்றாண்டு கோட்டை, 150 அடி ஆழமுள்ள குகைகள் - Gandikota பள்ளத்தாக்கின் வரலாறு என்ன?twitter
Published on

இந்தியாவில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன. தனித்துவமும், வரலாற்று சிறப்பம்சமும் வாய்ந்த கிராமங்கள் நமது நாட்டில் ஏராளம். இதுவே இவற்றினை சிறந்த சுற்றுலா தலமாகவும் மாற்றுகின்றன

அந்த வரிசையில் நாம் ஆந்திராவில் அமைந்திருக்கும் கந்திகோட்டா கிராமத்தை பற்றி பார்க்க போகிறோம். இதன் சிறப்பே, பெண்ணாறு நதி பாய்ந்து ஓடும் பிரமிக்க வைக்கும் பள்ளத்தாக்கு (gorge) தான்.

ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கந்திகோட்டா கிராமம்.

காலமாற்றத்தில், பெண்ணாறு நதி, எர்மாலா மலைகளின் பிரம்மாண்ட இளஞ்சிவப்பு கிரானைட் பாறைகளை செதுக்கி, இந்த பள்ளத்தாக்கை தானே உருவாக்கி கொண்டது என்று கூற்றுகள் உண்டு.

இப்போது நாம் பார்த்துக்கொண்டிருப்பது, ஆண்டுகள் கடந்த ஒரு அற்புதமான இயற்கை உருவாக்கம்.

13ஆம் நூற்றாண்டு கோட்டை, 150 அடி ஆழமுள்ள குகைகள் - Gandikota பள்ளத்தாக்கின் வரலாறு என்ன?
Janjira Fort: இந்தியாவின் வீழ்த்தப்படாத கோட்டை இவை தான்! |Podcast

இதை தவிர இங்கு ஒரு பழங்காலத்து கோட்டை, இரண்டு அழகிய கோவில்கள், ஒரு பள்ளிவாசல், ஒரு பெரிய களஞ்சியம் போன்ற வரலாற்றை உரைக்கும் பல ஆதாரங்கள் இருக்கின்றன.

இந்த பள்ளத்தாகினை அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள கிரான்ட் கான்யானுடன் (Grand Canyon) ஒப்பிடுகின்றனர்.

இந்த கந்திகோட்டா பள்ளத்தாக்கு அக்காலத்தில் ஆந்திராவை ஆண்ட மன்னர்களின் வல்லமையின் சின்னமாக விளங்கியது. காக்கதீய வம்சத்தினர், விஜயநகரத்தவர்கள் முதல் குதுப் ஷாகிகள் வரை, இந்த நீண்ட நெடிய பள்ளத்தாக்கு அவர்கள் வசமிருந்தால், வலுப் பெற்றவர்களாகவும், அதிக அதிகாரம் உள்ளவர்களாகவும் காட்டியது.

நல்லாட்சி புரிய இதனை முக்கியக் கூறாக பார்த்தன அரசுகள்.

கந்திகோட்டா கோட்டை

இந்த கோட்டை 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. செம்மணற் கற்களால் கட்டப்பட்ட நீண்ட 5 மைல் கோட்டை சுவர், பல ஆண்டுகளுக்கு பல்வேறு அரசுகளின் இருப்பிடமாக இருந்தது.

20 அடி உயரம் கொண்ட கோட்டை நுழைவாயில், நுணுக்கமான வேலைபாடுகள் கொண்ட 101 அரண்மனைகள், இந்த கோட்டைக்குள் அடக்கம். இந்த கோட்டையில், கந்திகோட்டா கோவில் மற்றும் ஜமா மசூதியும் உள்ளன.

பல வம்சத்து மன்னர்கள் இந்த பகுதியை ஆண்டதால், கோவில், மசூதி என இந்த கோட்டையில் அனைத்தையும் பார்க்கலாம்.

13ஆம் நூற்றாண்டு கோட்டை, 150 அடி ஆழமுள்ள குகைகள் - Gandikota பள்ளத்தாக்கின் வரலாறு என்ன?
Janjira Fort: இந்தியாவின் இந்த வீழ்த்தப்படாத கோட்டை பற்றி தெரியுமா?

பெலம் குகைகள்

இந்த பள்ளத்தாக்கில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேர தூரத்தில் பெலம் குகைகள் உள்ளன. இவை இந்தியாவின் இரண்டாவது பெரிய குகைகள்.

மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் உள்ள சுண்ணாம்பு படிவுகள் வழியாக, ஓடிய நிலையான நீரோட்டம் இந்த குகைகளை உருவாக்கியிருக்கும் என நம்பப்படுகிறது. இந்த குகைகள் 150 அடி ஆழமுடையவை.

இந்த குகைக்கு வெளிபுறத்தில், சுமார் 40 அடி உயரத்தில் புத்தர் சிலை ஒன்று இருக்கிறது. இந்த குகைகள், புத்த மதத்தவர்களுக்கு ஒரு முக்கிய ஆன்மீக தலமாக உள்ளது.

கந்திகோட்டாவுக்கு எப்படி செல்வது?

பெங்களூருவுக்கு சென்றடைந்து, அங்கிருந்து பேருந்திலோ, வாடகை காரிலோ நாம் கந்திகோட்டாவை அடையலாம். இதற்கு சுமார் 6 மணி நேரம் எடுக்கும்.

அல்லது ரயிலில் செல்ல விரும்பினால், ஜம்மாலமடுகு, கடப்பா, தடிபட்ரி ஆகிய ரயில் நிலையங்களில் இறங்கினால், இவ்விடத்தை சென்றடையலாம். சாலை மார்கமாக செல்வதே சிறந்த தேர்வாக இருக்கும்.

வரலாற்று பிரியர்களுக்கு, இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த கந்திகோட்டா ஒரு சிறந்த சுற்றுலா தலமாக இருக்கும்.

13ஆம் நூற்றாண்டு கோட்டை, 150 அடி ஆழமுள்ள குகைகள் - Gandikota பள்ளத்தாக்கின் வரலாறு என்ன?
டெல்லி: மங்கோலியர்களை தண்டிக்க கட்டபட்ட 13ஆம் நூற்றாண்டு கோபுரம் - ஓர் இருண்ட வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com