Chhattisgarh : ராய்பூரில் ஹெலிகாப்டர் விபத்து- 2 விமானிகள் பலி

சத்திஸ்கர் தலைநகர் ராய்பூரின் சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் நேற்று இரவு ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கிக் கொண்டிருக்கும் போது வெடித்துச் சிதறியதில் அதை இயக்கிய இரண்டு விமானிகளும் பலியாகினர்.
Crashed Training Chopper
Crashed Training ChopperTwitter
Published on

நேற்றிரவு சத்திஸ்கர் மாநிலம், ராய்பூர் நகரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து சிதறியது. இதில் விமானிகள் கோபால் கிருஷ்ண பாண்டா மற்றும் ஸ்ரீவாஸ்தவா பலியாகினர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் ஹெலிகாப்டரில் இல்லாததால் பெறும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் வழக்கமான விமான பயிற்சி மேற்கொள்ளப்பட்ட போது, சுமார் 9.10 மணியளவில், விபத்து ஏற்பட்டதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் பிரசாந்த் அகர்வால் தெரிவித்தார். விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த விமானிகள் இருவரும் உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA)-வுடன் சத்தீஸ்கர் அரசாங்கம் இணைந்து விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.

இறந்த விமானிகளின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Crashed Training Chopper
டெல்லி விமான நிலையம் : துபாயை பின்னுக்கு தள்ளிய இந்தியா - ஓர் சாதனை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com